Microsoft நிறுவனம் தனது Windows
இயங்குதளத்திற்கான அப்டேற்றினை குறிப்பிட்டதொரு காலத்திற்கொருமுறை
வெளியிட்டுக்கொண்டிருக்கும். இந்த அப்டேற்றானது Security மற்றும் சில
அடிப்படை/ அவசியமான வசதிகளை கொண்டிருக்கும். Windows இனை அப்டேற்
செய்வதற்கு கணினி இணைய வசதியினை கொண்டிருக்கவேண்டும்.
இப்போது இணைய வசதி இல்லாதவர்களும்
அல்லது வேகம் குறைந்த இணைப்பு வசதி உள்ளவர்களும் வெளி இடங்களில் இருந்து
அப்டேற்றினை தரவிறக்கி பயன்படுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. Autopatcher. என்னும் மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் Windows இனை அப்டேற் செய்துகொள்ளலாம்.
- இணைய இணைப்புள்ள கணினி ஒன்றில் இந்த Autopatcher மென்பொருளை தரவிறக்குங்கள் Autopatcher
- தரவிறக்கிய பின் Install ஐ கிளிக் செய்து Run ஐ கிளிக் செய்யுங்கள்
- அடுத்து எந்த இயங்குதளத்திற்கான அப்டேற் வேண்டும் என்பதை தெரிவு செய்யவேண்டும்
- தெரிவு செய்ததும் கிடைக்கக்கூடிய அப்டேற்றின் பட்டியல் காட்டப்படும். அதில் தேவையானதை தெரிவு செய்துவிட்டு Download என்பதை கிளிக் செய்யவேண்டும்
- தரவிறங்கியதும் அப்டேற்றினை Copy பண்ணி அப்டேற் செய்யவேண்டிய கணினியில் இட்டு Install செய்துகொள்ளலாம்
Offline இல் கணினியை அப்டேற்
செய்வதற்கு இது ஒரு சிறந்த முறை. Windows இன் அனைத்து இயங்குதளங்களுக்கும்
இது Support ஆகிறது ( Windows 7, Vista, Xp)
No comments:
Post a Comment