காமவியலில் இந்தியாவின் பங்கு
காமவியலைப் பற்றிய நூலாக இன்று உலகம் முழுதும் வாத்ஸாயனாவின் காமசூத்ரா அறியப்படுகிறது. இது போன்ற பல புத்தகங்களை இந்தியா உலகிற்கு தந்துள்ளது. அவற்றின் பட்டியல் இதோ!.
வாத்ஸாயனா (கி.பி 300 – கி.பி 400)
உலகின் முதல் காமவியல் நூலான “காம சூத்ரா”வை இயற்றியவர் இவர். இந்நூலில் காமத்தைப் பற்றி மிகவும் துணிச்சலாகவும், அறிவியல் பூர்வமாகவும் விளக்கங்களை எழுதியிருந்தார் இந்த ரிஷி. ஐம்புலன்களாலும் இன்பத்தை அனுபவிப்பதே சிறப்பு. பார்த்து, கேட்டு, தொட்டு, சுவைத்து, முகர்ந்து இன்புறுதலைப் பர்றியும், முத்தமிடுதல், அரவணைத்தல், செல்லமாய்க் கடித்தல், பிரியமாய்ப் பிராண்டுதல், முயக்க பாவங்கள் போன்றவற்றைப் பற்றியும் மிக விவரமாக எழுதியுள்ளார்.
காமம் என்பதன் கலை நுணுக்கங்களை விவரிக்கும் இந்நூலில் அதிகசுகம் பெறப் பயண்படுத்தக்கூடிய உபகரணங்கள், சொக்கு மருந்துகள், வழிமுறைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. அந்தக் காலத்து நூலாக இருந்தாலும் அதன் நூதன கருத்துகள் இன்ரும் மக்களைக் கவருவதாக அமைந்திருக்கின்றன.
கொக்கோகா(கி.பி 100 – கி.பி 1200)
இவர் “ரதி ரகசியம்” என்ற நூலை இயற்றியவர். இவர் பெண்களின் காம சுபாவங்களையும், காமக் களிப்போற்றும் உடல் பாகங்களைப் பர்றியும் பெண்கள் காமத்தை அதிகமாய் விரும்பும் தருணங்களைப் பற்றியும் விவரமாக எழுதியுள்ளார். சொக்கு மருந்துகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆண் பxண்ணின் உடல் உறுப்பின் அளவைக் கொண்டு அவர்களை ஒன்பது வகையினராகப் பிரித்து வருணித்துள்ளார்.
பத்ம ஸ்ரீ(கி.பி 1000)
பத்ம ஸ்ரீ என்பவர் பௌத்த மதத் துறவி. இவரது நூலான “நகர சர்வஸ்வம்” சங்கேத மொழியால் காதலை தெரிவிக்கும் கலையைப் பற்றிய விரரங்கள் கொண்டதாகும்.
ஜோதிரிஸா (எ) கவிசேகரா(கி.பி 1300)
“பஞ்ச சயகா” என்ற இவரது நூல் காமசுகத்தை மேம்மபடுத்தும் மருந்துகளைப் பற்றியும், காமம் சம்பந்தப்பட்ட பாகங்களின் பராமரிப்புப் பர்றியும் விளக்குகிறது.
பிரௌத தேவராஜா(கி.பி 1400)
“ரதி ரத்ன பிரதிபிகா” என்ற இவரது நூல் வெவ்வேறு தேசத்தை சேர்ந்த பெண்களின் அழகை வர்ணிப்பதாகும். காமத்தின் போது ஆலிங்கணம் கொள்ளும் பல காரணங்களையும் இது விவரித்தது. அவற்றில் 21 மல்லாந்து , 3 ஒருக்கழித்து, 2. அமர்ந்து, 5 நின்று, 11 வளைந்து, குனிந்து, 2 பெண் மேலிருந்து காமுறும் கரணங்களாகும்.
ஜெதேவா(கி.பி 1500)
“ரதி மஞ்சரி”, அதாவது “காதல் மாலை”, என்ற இவரது கவிதை தொகுப்பு எளிய முறையில் காமவியலை வர்ணிப்பதாக அமைந்துள்ளது.
கல்யாண மாலா(கி.பி 1600)
“அனங்க ரங்கா” என்ற இவரது நூல் திருமண வாழ்வில் வெற்றி வழிகளையும், எதிர் பாலினரை மயக்கும் வழிகளையும் விவரிக்கிறது.
நரசிங்க சாஸ்திரி(கி.பி 1800)
“சுத்ர விருத்தி” என்ற இவரது நூல் வாட்சாயானாவின் “காமசூத்ரதா”வை எளிய முறையில் விளக்குவதாக அமைந்துள்ளது.
யஸோதாரா(கி.பி 1000 – 1300)
“ஜெயமங்களா” என்எற இவரது நூல் இவர் காலத்திற்கு முன் எழுதப்பட்ட காமசூத்ரா போன்ற நூல்களின் தாத்பரியத்தை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
வஜிகரணம்
வஜிகரணம் ஆயுர்வேதத்தின் எட்டு கிளைகளில் ஒன்று. “சாரகா சம்ஹிதா” என்ற அவரது மருத்துவ நூலில் வஜிகரணத்தை பற்றி விளக்கியுள்ளார்.
No comments:
Post a Comment