ismayil singam.blogspot.com

Showing posts with label internet tips. Show all posts
Showing posts with label internet tips. Show all posts

Sunday, 29 January 2012

இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க சில இலகு வழிகள்

இன்றை உலகில் இணையம் என்பது ஒரு சாதரணமான விடயமாக மாறிவிட்டது. இன்று எல்லா விடயத்துக்கும் இன்று இணையம் பெரிதும் பயன்படுகிறது. இதனால் இணைய பாவனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இணையம் என்பது ஆரம்ப காலத்தில் மிக குறைந்த வேகத்திலேயே செயற்பட்டது. அக்காலத்தில் Dial up connection  என அழைக்கப்படும். கம்பி வழி தொலைபசியின் நேரடி இணைப்பின் முலமே இணைய இணைப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு  கொடுக்கப்பட்ட இணைய இணைப்பு அக்காலத்தில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகவே காணப்பட்டது. இவ் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான செலவு அதிகம் என்பதால் ஒரு சிலரே இந்த இணைப்பை பெற்றிருந்தனர்.


ஆனால் இப்போது  Broad Band  எனப்படும்  அதிவேக இணைய இணைப்பு வழங்கப்படுகிறது. அதே வேளை அவ்விணைப்பு குறைந்த செலவில் வழங்கப்படுவதனால் அனைவரும் இவ்விணைப்பை பெற விரும்புகின்றனர். இதனால் இணையம் உபயோகிப்போர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு இணைய அணைப்பபினை பாவிப்போர் தொகை அதிகரித்து காணப்படுவதால் கூட இணைய வேகம் குறைவடைய வாய்ப்புக்கள் உள்ளது.


இன்றைய உலகில் இணையம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இணையம் வேகம் குறைவானதாக காணப்படுவதால். பணிகளில் சிரமம். நேர வீணடிப்பு ஆகியவை  இடம்பெறுகிறது. இதனை தவிர்க்க இணைய பாவனைக்கு உயர் தரத்திலான சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் பணிகளில் சிரமம் நேர வீணடிப்பு என்பன தவிர்க்கப்பகிறது.
  
அது மட்டுமன்றி இணைய வேகம் குறைவதற்கு நீங்கள் பயன்படுத்தும் உலவிகள் (Browser )  கூட ஒரு காரணமாக காணப்படுகிறதுஅதாவது நீங்கள் பயன்படுத்தும் உலவியில் காணப்படும்  History களை அழிப்பதன் மூலம் இணைய உலாவலை இலகுவாக்கலாம். அதாவது History எனப்படுவது முன்னர் நீங்கள் உலவியை பாவித்த போது அங்கு தற்காலிகமாக சேமிக்கப்படும் தரவுகளே ஆகும். இதன் நோக்கம் நீங்கள் ஏற்கனவே பாவிக்கும் தளக்களுக்கு மறுபடி நுழைய எத்தனிக்கும்போது அதை இலகுவாக்குவதே ஆகும். இத் தரவுகள் அதிகரித்து காணப்படுவதாலும் கூட இணைய வேகத்தை குறைக்க  சந்தர்ப்பங்கள் உள்ளது. இவ்வாறு தேவையற்ற தரவுகள் மற்றும் செயற்பாடுக்கு உதவாத கோப்பக்களை அழிப்பதற்கு Ccleaner பயன்படுகிறது
இம் மென்பொருளை தரவிறக்க CCleaner

இதன் மூலம் தேவையற்ற History தரவுகளை அழிக்க கூடியதாக உள்ளது . இவ்வாறு தேவையற்ற வரலாற்று கோப்புக்களை அழிப்பதன் முலம் இணைய செயற்பாடுகளை வேகமாக மேற்கொள்ள கூடியதாக இருக்கின்றது.

அது மட்டுமன்றி அதிகமான தரவிறக்கம் மூலமும் இணைய வேகம் குறைவடைய வாய்ப்புக்கள் உள்ளன. அதவாவது ரொறண்ட் (Torrent) போன்ற தரவிறக்கத்துக்காக பயன்படுத்தப்படும் தரவிறக்கிகள் இணைய வேகத்தை குறைப்பதற்கு காரணமாக உள்ளது. இவ்வாறானவை தரவிறக்கங்களை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவை இணைய வேகத்தை முழுமையாக எடுத்து தரவிறக்கங்களை மேற்கொள்கின்றது இதனால் இணைய வேகம் குறைவடை வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இணைய வேகத்தை அதிகரிப்பதற்காக இவ்வாறான தரவிறக்கிகளை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலமும் இணைய வேகத்தை அதிகரிக்க முடியும்


இணைய வேகத்தை அதிகப்படுத்தும் மென்பொருள்கள் என்ற பெயரில் பல வகையான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால் எனது கருத்துப்படி இவற்றில அநேகமானவை ஸ்பாம்/ மால்வேர் போன்றவையாகவே உள்ளன. ஆகவே இப்படியான மென்பொருட்களை தவிர்ப்பது நல்லம்.

எனவே உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க மேலே குறிப்பபிடப்பட்ட வழிமுறைகளை கையாள்வதன் முலம் உங்கள் இணைய வேகத்தை அதிகரித்து கொள்ளலாம்.

Thursday, 19 January 2012

ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி

இணையத்தில் நுழைந்த்துமே வரிசையாக பல இனையதள‌ங்களை திற‌ந்து வைத்து கொண்டு அவற்றில் உலாவுவது தான் பலருக்கு வழக்கமாக இருக்கிறது.இப்படி ஒரே நேரத்தில் பல் இணையதளங்களை பார்ப்பதை எளிதாக்கும் வசதிகளும் அறிமுகமாகி கொண்டேயிருக்கின்றன.
சில காலங்களுக்கு முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை பார்க்க வேண்டும் என்றால் தனி தனி விண்டோவை திறந்து கொள்ள வேண்டும்.ஒரு தளத்தில் இருந்து இன்னொரு மற்றொரு தளத்திற்கு செல்ல ஒவ்வொரு விண்டோவாக தாவிக்கொண்டிருக்க வேண்டும்.
இதற்கு பதிலாக விண்டோவை விட்டு வெளியேறாமலேயே அதிலேயே ஒவ்வொரு பத்தியாக புதிய தளங்களை திறந்து கொள்ளும் வசதி அறிமுகமானது.
இப்படி பத்தி பத்தியாக தளங்களை பார்ப்பதை விட எளிய வழி தேவைப்பட்டால் ஒரே பக்கத்தினை பல்வேரு கட்டங்களாக பிரித்து கொண்டு ஒவ்வொரு கட்டதிலும் ஒரு இணையதள‌த்தை திறந்து கொள்ளும் வசதியும் அறிமுகமாகியுள்ளது.
இந்த மூறையில் உள்ள ஒரே சங்கடம் இணையதளங்களுக்கான இடம் மிகவும் குறைவாக‌ இருக்கும் என்பது தான்.இந்த குறை இல்லாமல் ஒரே நேரத்தில் ஒரே பக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைய‌தளங்களை சுலபமாக காண விரும்பினால் சைட்பவுச் இணையதளம் அதற்கான வழி காட்டுகிறது.
இந்த தளம் இணையவாசிகள் பார்க்க விரும்பும் இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து.இந்த இணையகட்டில் உள்ள இணையதளங்களை இணைய‌வாசிகள் சுலபமாக பார்வையிடலாம்.
இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள எந்த எந்த இனையதளங்களை பார்வையிட விரும்புகின்றனறோ அவற்றின் முகவரியை இந்த தளத்தில் சமர்பிக்க வேன்டும்.இவ்வாறு மூன்று முகவரிகளை சமர்பிப்தற்கான 3 கட்டங்கள் தான் இருந்தாலும் ,தேவை என்றால் மேலு கட்டங்களை கூட்டி கொண்டு மேலும் முகவரிகளை சமர்பிக்கலாம்.
முகவரிகளை சம‌ர்பித்த பின் அவற்றை பார்வையிடுவதற்கான முகவரியை உருவாகி தருகிறது.அந்த முகவரியில் வரிசையாக சம்ர்பிக்கப்பட்ட தளங்கலின் முகவ‌ரி இருக்கும்.எந்த தள‌ம் தேவையோ அத‌னை கிளிக் செய்தால் அந்த தளம் திரையில் தோன்றும்.அடுத்த தளத்தை பார்க்க வேண்டும் என்றால் அந்த தலத்திற்கான முகவரியை கிளிக் செய்ய வேண்டும்.அடுத்த தளத்தை பார்க்க அதன் முகவரியை கிளிக் செய்ய வேண்டும்.
மீண்டும் முதல் தளத்தையே காண விரும்பினால் மீண்டும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.எந்த தளத்தை கிளிக் செய்கிறோமோ அது மட்டும் தோன்றும் மற தளங்களுக்கான இணைப்பு அதே பக்கத்தில் மேல் பக்கதிலோ அல்லது கிழ் பக்கத்திலோ இருந்து கொண்டு இருக்கும்.
ஆக‌, இணையவாசிகள் தாங்கள் இருக்கும் இணைய பக்கத்தை விட்டு வெளியேறாமலேயே விரும்பும் இணையதளங்களை எல்லாம் பார்த்து கொண்டே இருக்கலாம்.
தினமும் பல்வேறு தள‌ங்களில் உலா வருபவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக‌ இருக்கும்.
இந்த தளம் உருவாகி தரும் முகவரியை அப்படியே நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ள்லாம்.இவ்வாறு செய்வதன் மூலம் நண்பர்களும் அதே இணையதளங்களை பார்க்க முடியும்.புதிய தளங்க‌ளை பகிர்ந்து கொள்ளவோ இணைய தளங்கள் சார்ந்த உரையாடலில் ஈடுபடவோ இது உதவியாக இருக்கும்.
இதே போலவே பல இணையதளங்களை பார்க்கும் வசதியை ஐயூ தாளமும் வழங்குகிறது.ஆனால் ஐயூ தளத்தில் ஒரே நேரத்தில் மூன்று தளங்களை மட்டுமே பார்க்க முடியும்.
மூன்று தளங்கள் என்ற கட்டுப்பாடு இருந்தாலும் அவற்றை மூனு விதமாக பார்க்கும் வசதி உள்ளது.அதாவது முன்று தளங்களை காணும் வகையில் திரை தோற்றம் மூன்று விதங்களில் பிரிக்கப்படுகிறது.அதற்கேற்ப தளங்களை இரண்டும் பாதிகளாகவோ அல்லது மூன்று கட்டங்களாகவோ பார்க்கலாம்.இரண்டும் கட்டங்களையும் மேலும் கீழாகவோ பக்க வாட்டிலோ பார்க்கலாம்.
கூகுலின் மொழிபெயர்ப்பு வசதியை பயன்ப‌டுத்தி கொள்வதற்கான வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி;http://www.sitepouch.com/

Wednesday, 4 January 2012

தமிழில் எழுதியதை படிக்கும் செயலி



இந்த தொடர்பை பயன்படுத்தி உரைவாசிக்கும் செயலிக்கு செல்லுங்கள்,


அங்கு தமிழில் தட்டச்சு செய்தோ அல்லது ஒரு உரையை நகலெடுத்து ஒட்டிய (copy, paste) பிறகு கீழே உள்ள சமர்பி (submit) என்ற கட்டளையைம் சொடுக்குங்கள், உடனே மற்றொறு சன்னல் திறக்கும் அதில் சொடுக்கு (click here) என்ற இடத்தில் சொடுக்குங்கள், நீங்கள் உள்ளிட்ட உரை ஒலிப்பதிவாக தரவிறக்கம் ஆகும்.

இது ஒரு அருமையான செயலியாகும், இனி உங்கள் விருப்பபடி உரைகளை ஒலிவடிவில் கேட்கலாம், பதிவு செய்து பாதுகக்கலம்,

இனையத்தில் தினமும் 350 சம்பாதிக்கலாம் வாங்க


தினமும் 350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும்,  இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள்.  தினமும் Login செய்வதற்கு 20 பைசாகொடுக்கிறார்கள்.  நாம் நம் தளத்தில் நிறைய விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக காத்திருப்போம் ஆனால் வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள் பூத்துவிடும்.  ஆனால் இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
Facebook அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20%  கிடைக்கும்.
இந்த தளத்தில் வரும் ஈமெயில் செக் செய்தால் அதற்க்கும் அவர்கள் பணம் தருகிறார்கள். இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS 'சும் அனுப்பிக் கொள்ளலாம். தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்.  இந்த லிங்க்ஐ  கிளிக் செய்தால் எனக்கு Referal பணம் கிடைக்கும்.  நன்றி...


Tuesday, 3 January 2012

தமிழில் ஜிமெயில்

Buzz It
Gmail திரையில் அனைத்து வசதிகளையும் தமிழில் மாற்றுவதற்கு,


ஜிமெயில் லாகின் திரையில் உங்கள் பயனர் பெயரையும், கடவு சொல்லையும் கொடுத்து  கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது ஜிமெயில் திரையின் வலது புறம் மேல் மூலையிலுள்ள Settings என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது கீழே வரும் Settings திரையில் General டேப் தேர்வு செய்யப்படாமல் இருந்தால் 'General' டேபை கிளிக் செய்து கொள்ளுங்கள்.


இதில் Language என்பதற்கு நேராக உள்ள Gmail Display Language -ல் தமிழ் ஐ தேர்வு செய்யுங்கள்.

மின்மடலை தமிழில் உருவாக்க, Enable Transliteration என்பதை கிளிக் செய்து, பிறகு தமிழை தேர்ந்தெடுங்கள். (இனி Compose mail சென்றால் 'அ' என்ற பொத்தானை கிளிக் செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம்). 
பிறகு, கீழே உள்ள Save Changes என்ற பொத்தானை சொடுக்குங்கள்.






அவ்வளவுதான்!. இனி உங்கள் ஜிமெயில் திரை தமிழில் மிளிரும்..,

Thursday, 29 December 2011

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! வலைமனை கட்டுவோமா!

இணையத்தில் ஆளுக்கொன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் பிளாக்குகள் எனப்படும் வலைமனை அமைப்பது ஒரு கலாச்சார பொழுது போக்காக ஆகிவிட்டது. சாதனைகள் மூலம் சரித்திரத்தில் இடம் பெறுகிறோமோ இல்லையோ, ஒரு பிளாக் மூலம் சரித்திரத்தில் இடம் பெறும் வழி கிடைத்துள்ளது.


இன்டர்நெட் முகவரியினை விலை கொடுத்து வாங்கி தளம் ஒன்றை எச்.டி.எம்.எல். வல்லுநர் உதவியுடன் உருவாக்கி பின்னர் அதனை தாங்கிக் கொள்ள ஒரு சர்வருக்குக் கட்டணம் செலுத்தி அல்லல் படுவதைக் காட்டிலும் இலவசமாக ஒரு பிளாக் அமைப்பது மிகவும் எளிதான செயலாகப் போய்விட்டது. இதற்கென பல தளங்கள் நமக்கு இலவசமாக இடமும் வசதிகளும் தந்தாலும் மூன்று தளங்கள் மக்களிடையே பிரபலமாகி யுள்ளன.
அவை:
1. Google Blogger/Blogspot (www.blogger. com)
2. Windows Live Spaces (http://spaces. live.com)
3. Wordpress (www.wordpress.com)
முதலில் பிளாக் என்பது என்ன? என்று பார்க்கலாம். “web log” என்பதன் சுருக்கமே Blog. அடிப்படையில் இது ஒரு ஆன்லைன் பத்திரிக்கை எனலாம். இதனை தனிநபர் தகவல் அறிவிக்கை யாகவும் வைத்துப் பயன்படுத்தலாம். அல்லது தங்கள் தொழில்களுக்கான அறிவிப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தனிநபர் வலைமனையில் அவர்களின் கருத்துக்கள், அனுபவங்கள், தாங்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம், ரசித்த கவிதை, படித்த புத்தகம், ருசித்த குழம்பு என எதனை வேண்டு மானாலும் எழுதி வைக்கலாம். இது வளர வளர ஒரு சுய சரிதையாக மாறிவிடும். உங்களுக்குப் பின்னரும் உங்கள் சந்ததியினர் மற்றும் பிறர் பார்த்து உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். வர்த்தக ரீதியான வலைமனைகள் உங்கள் வர்த்தகம் குறித்த மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகளாகச் செயல்படும். விளம்பரங்களையும் இதில் சிலர் வெளியிடுகின்றனர்.
பிளாக் தயார் செய்து வெளியிட உதவும் இந்த மூன்று தளங்கள் தரும் சேவைகளைக் காணலாம்.

1. Google Blogger/Blogspot: ஆகஸ்ட் 1999ல் சதா பீர் குடித்துக் கொண்டிருந்த மூன்று நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தளமே பிளாக்குகளுக்கான சேவையைத் தொடங்கியது. அப்போது இது பைரா லேப்ஸ் (Pyra Labs) என்ற பெயரில் ஒரு நிறுவனமாக இயங்கியது. கூகுள் இதனை 2003 ஆம் ஆண்டில் வாங்கியது. இந்த தளத்தில் பிளாக் உருவாக்கும் உதவியினைப் பெற முயற்சிப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். இதனை Blogger.com அல்லது Blogspot.com என்பதா? இரண்டுமே ஒன்றுதான். எந்த பெயரை யூ.ஆர்.எல். ஆக அமைத்தாலும் ஒரே தளத்திற்குத் தான் செல்லும். ஆனால் இதில் பிளாக் ஒன்றை உருவாக்கிநால், அதற்கு உங்கள் பெயருடன் “.blogspot.com” என்று இணைந்துதான் கிடைக்கும்.
இந்த தளத்தின் மூலம் ஒரு பிளாக் தொடங்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஜிமெயில் முகவரி ஒன்று வேண்டும். இதுவரை இல்லை என்றால் உடனே ஒன்று தொடங்கிக் கொள்ளுங்கள். இது எளிது மட்டுமல்ல; இலவசமும் கூட என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் பிளாக் அமைப்பதில் புதியவர் என்றால் இந்த தளத்தில் தொடங்குவதே நல்லது. இது இலவசம் என்பதால் மட்டுமல்ல; மிக எளிதாக இங்கு பிளாக் ஒன்றை அமைக் கலாம் என்பதே. இது இலவசம் என்பதாலேயே சில விஷயங்கள் நாம் விருப்பப்படாமலேயே நம் பிளாக்கில் இடம் பெறும். நம் பிளாக்கின் மேலாக நீள் செவ்வகக் கட்டம் ஒன்று இருக்கும். அதில் பிளாக் லோகோ ஒன்று இடம் பெறும். அதனை அடுத்து ஒரு பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்தால் உங்கள் பிளாக் போல அமைக்கப்பட்டிருக்கும் மற்ற பிளாக்குகளுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இது கொஞ்சம் உங்கள் பிளாக்குகளைப் பார்வை யிடுபவர்களின் கவனத்தை உங்கள் பிளாக்கிலிருந்து இழுத்து மற்றவர்களின் பிளாக்குகளுக்கு அல்லவா கொண்டு செல்லும். இதனை நீக்க முடியாது. எச்.டி.எம்.எல். தொழில் நுட்பம் மற்றும் சிஸ்டத்தில் வல்லுநராக இருந்தால் இதனை நீக்குவதில் முயற்சிக்கலாம். அல்லது அப்படியே விட்டுவிடலாம். ஆனால் அப்படி செய்வது கூகுள் நிறுவனம் விதிக்கும் விதிமுறைகளுக்கு எதிரான தாகும்.
கூகுளின் பிளாக்கர் டாட் காம் தளத்தின் மூலம் பிளாக் அமைப்பதில் பல அனுகூலங்கள் கிடைக்கின்றன. இதன் வளைந்து கொடுக்கும் தன்மை நமக்கு அதிகம் உதவுகிறது. நீங்கள் எந்த அளவிலும் எவ்வளவு ஸ்பேஸ் எடுத்தும் உங்கள் பிளாக்கினை அமைக்கலாம். பிளாக் அமைப்பதற்குத் தரப்படும் இன்டர்பேஸ் அருமையாக எளிமையாக உதவிகளைத் தருகிறது.
இங்கு உங்கள் பிளாக்குகளுக்கான டெம்ப்ளேட்டுகள் நிறைய கிடைக்கின்றன. இங்கிருந்து மேலும் பல டெம்ப்ளேட்டு களைத் தேடி எடுத்தும் பயன்படுத்தலாம்.
பிளாக்கர் டாட் காம் தளத்தின் இன்னொரு சிறப்பு உங்கள் பிளாக் தனி இலவச டொமைன் ஆக இருப்பதுதான். உங்களுடைய பெயர் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் என உங்கள் பிளாக் டொமைன் பெயரில் இருக்கும். இது போல இலவசமாக டொமைன் ஒன்றை பிளாக்கிற்குத் தருவது இந்த தளம் மட்டுமே.
நீங்கள் விரும்பினால் உங்கள் பெயரைப் பதிவு செய்து, உங்கள் பெயர் மட்டும் கொண்டு பெயர் டாட் காம் என்ற முகவரி பெற்று உங்கள் பிளாக்கினை இதில் லிங்க் செய்திடலாம். இதற்கு ஆண்டு தோறும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் கூகுள் எந்த கட்டணமும் இன்றி இந்த சேவையை வழங்குகிறது.

2. Windows Live Spaces: உங்களிடம் எம்.எஸ்.என். ஹாட்மெயில், எம்.எஸ்.என். மெசஞ்சர் அல்லது மைக்ரோசாப்ட் பாஸ்போர்ட் அக்கவுண்ட் இருந்தால் உங்களுக்கு விண்டோஸ் லைவ் ஸ்பேஸஸ் தளத்தில் இடம் உள்ளது. 2004 ஆம் ஆண்டு வாக்கில் வெப் 2.0 பிரபலமான வேளையில் மைக்ரோசாப்ட் இதனை கூகுள் நிறுவனத்தின் பிளாக்கர் டாட் காம் தளத்திற்கு போட்டியாகத் தொடங்கியது. இது இதன் பெயருக்கேற்ப இயங்குகிறது. இங்குள்ள பிளாக்குகள் ஜஸ்ட் பிளாக்குகள் மட்டுமல்ல. உங்களுக்கான உயிர்த் துடிப்புள்ள இடம் என்கிறது மைக்ரோசாப்ட். நீங்கள் உங்களைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு இடத்தை மைக்ரோசாப்ட் தருகிறது.
இங்கு பிளாக்குகளுக்குக் கிடைக்கும் டிசைன் அனைவரையும் கவர்வதாக உள்ளது. எளிமையாகவும் கவரும் வகை யிலும் உள்ளது. இதில் கூகுள் பிளாக்குகளில் உள்ளது போல மேலே பார் எதுவும் இல்லை. இங்கு பிளாக்கு களுக்கான தீம் என்னும் மையக் கருத்தினைப் பார்த்தால் இது குழந்தை களுக்கானது போல் இருக்கும். பெரிய எண்ணிக்கையில் தீம்கள் இல்லை என்றாலும் இங்கு தரப்படுபவை நமக்குப் போதுமானதாகவே உள்ளன.
லைவ் ஸ்பேஸஸ் என்னும் இந்த பிளாட் பாரம் தான் பிளாக்குகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மற்ற சாப்ட்வேர் புரோகிராம் களுடன் இணைக்கின்றன. லைவ் சூட், விண்டோஸ் லைவ் போட்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் லைவ் ஹோம், விண்டோஸ் லைவ் குரூப், விண்டோஸ் லைவ் ஈவன்ட்ஸ், ரைட்டர் மற்றும் லைவ் டூல் பார் ஆகியவற்றுடன் நேரடி இணைப்பு உங்கள் பிளாக்குகளுக்குக் கிடைக்கிறது. இவற்றின் தொடர்புகள் மூலம் உங்கள் பிளாக்குகளை மிகச் சிறப்பாக அமைக்க முடியும்.

3. Wordpress: இங்கும் இரண்டு யு.ஆர்.எல். முகவரிகள் கிடைக்கின்றன. Wordpress.com மற்றும் Wordpress.org இதில் எது சரி? இரண்டுமே சரிதான். வேர்ட்பிரஸ்.காம் பிளாக்குகளை அனைவருக்கும் இலவசமாக தன் தளத்தில் வைத்திட அனுமதி அளிக்கிறது. ஒரு சில வரையறைகள் மட்டுமே இங்கு உண்டு. இதற்கு மாறாக வேர்ட் பிரஸ் டாட் ஓ.ஆர்.ஜி. பின்புலத்தில் ஓப்பன் சோர்ஸ் கட்டமைப்பை நமக்கு இலவசமாக வழங்கி பிளாக்குகளை அமைத் திட உதவுகிறது. ஆனால் வடிவமைக்கப் பட்ட பிளாக்குகளை தங்கள் தளத்தில் இலவசமாக பதிய வைப்பதில்லை. இதற்கென தனியே ஒரு டொமைன் பெயர் கட்டணம் செலுத்திப் பெற்று பின் சர்வர் ஒன்றில் இடத்தையும் கட்டணம் செலுத்திப் பெற வேண்டும். ஆனால் பிளாக் ஒன்றை அமைப்பதில் மிக மிக எளிதாக அமைக்கும் வகையில் வழிகாட்டுவது இந்த தளம் தான்.இதனாலேயே பலரும் பிளாக்குகள் உருவாக்க இந்த தளத்தை நாடுகின்றனர். வேறு எந்த இணைய தளத்திலும் இல்லாத வகையில் 4,245 ப்ளக் இன் வசதிகளும் 628 தீம்களும் இந்த பிளாட்பாரத்தில் கிடைக்கின்றன.
இந்த தளத்தில் நுழைந்து பிளாக் அமைக்கும் வசதியினைப் பெற இந்த தளத்தில் பதிவு செய்திட வேண்டும். மற்ற இரண்டினைப் போல உங்கள் பதிவு உங்கள் இமெயிலுடன் தொடர்பு கொண்டிருப்பதில்லை. இங்கு பதிவு செய்து நுழைந்தவுடன் ஒரு டேஷ் போர்டினைப் பார்க்கலாம். இங்கிருந்து தான் உங்கள் பிளாக் அமைக்கும் வேலையை எப்போதும் மேற்கொள்ள வேண்டும்.
குடும்ப ரீதியாக ஒரு பிளாக் அமைக்க விரும்பி நீங்கள் விண்டோஸ் சர்வீஸ் விரும்பினால் விண்டோஸ் லைவ் ஸ்பேஸ் உங்களுக்கு உகந்தது. இப்போதுதான் பிளாக் அமைக்கும் தொடக்க வாதியா நீங்கள்? அப்படி யானால் பிளாக்கர் டாட் காம் உங்களுக்கு நல்ல வழி காட்டும். மிகவும் சீரியஸான முறையில் பிளாக் ஒன்றைத் தயாரிக்க விரும்பினால், அதனைத் தொடர்ந்து மேம்படுத்தி சிறப்பான பிளாக்காக எதிர்காலத்தில் அமைக்க விரும்பினால் உங்களுக்குத் தேவையான தளம் வேர்ட்ப்ரெஸ்.
என்ன! உங்களுக்கான வலைமனையை அமைக்கக் கிளம்பிட்டீங்களா! காசு பணம் இல்லாமல் சரித்திரத்தில் உங்கள் தகவல்களை அமைக்க இதைக் காட்டிலும் சிறந்த சாதனம் உங்களுக்குக் கிடைக்காது. எனவே ஆளுக்கு ஒரு பிளாக் அமைத்து நம் கருத்துக்களை எழுதி வைப்போம்.

Tuesday, 27 December 2011

படத்தை காப்பி செய்தே ஆக வேண்டும் என்றால்

கேள்வி: என் ஆய்வு தொடர்பாக இணைய தளங்களைப் பார்க்கையில் அதிலுள்ள படங்களை எப்படி காப்பி செய்திடலாம். சில படங்களைக் காப்பி செய்திட முயற்சிக்கையில், இந்த வசதி தரப்படவில்லை என்று செய்தி கிடைக்கிறது.

பதில்: இணைய தளங்களில் பதிந்து வைத்துள்ள படங்களை டவுண்லோட் செய்து நாம் பயன்படுத்தக் கூடிய வகையில் தான் வைத்திருப்பார்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். விரியும் மெனுவில் “Save Picture As....” அல்லது Save As என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உடனே வழக்கமாக My Pictures அல்லது Downloads என்ற டிரைவ் திறக்கப்பட்டு அங்கு சேவ் செய்திடவா? என்று கேட்கப்படும். வேறு டிரைவில் சேவ் செய்திடத் திட்டமிட்டால் அந்த டிரைவைத் திறந்து இதற்கென உள்ள ஒரு போல்டரில் சேவ் செய்திடலாம். போல்டர் தேவை எனில் ஒன்றை உருவாக்கலாம். டவுண்லோட் செய்திட முடியாமல் வைத்திருந்தால் கூட is facility is not enabled என்ற செய்தி கிடைக்கும். கட்டாயம் காப்பி செய்தே ஆக வேண்டும் என்றால் உங்களுக்குப் பிடித்த படத்தினைத் திரையில் தெரியுமாறு வைத்துக் கொண்டு பிரிண்ட் ஸ்கிரீன் Print Screen பட்டனை அழுத்தவும். கிளிப் போர்டுக்கு திரைக் காட்சி செல்லும். ஏதேனும் ஒரு பிக்சர்களைக் கையாளும் புரோகிராமில் (எடுத்துக்காட்டாக MS Paint) புதிய பைல் ஒன்றைத் திறந்து அதில் இதனை பேஸ்ட் செய்து பின் படத்தை மட்டும் கட் செய்து அதனை மீண்டும் புதிய பைல் ஒன்றைத் திறந்து பேஸ்ட் செய்து சேவ் செய்து கொள்ளலாம். இவ்வாறு சேவ் செய்திடு கையில் எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பதனையும் முடிவு செய்து அந்த பார்மட்டைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். பொதுவாக அனைவரும் விரும்பும் படங்களில் அதனை அளிக்கும் தளத்தின் நிறுவனப் பெயர் பதித்திருப்பார்கள். இதனை எளிதாக நீக்க முடியாது. தினமலர் இணைய தளத்தின் படங்கள் அவ்வகையில் தான் உங்களுக்குக் கிடைக்கும்.

இன்டர்நெட்டில் வேவு பார்த்தல்

இன்டர்நெட்டில் வேவு பார்த்தல்

நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன.
நம் கம்ப்யூட்டரில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா? இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம்.
1. ஒரு சில நிறுவனங்களே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் கம்ப்யூட்டர்களில் அவர்கள் தேடலைப் பற்றி அறிய குக்கீஸ் களை அனுப்புகின்றன. இது உண்மைக்கு மாறான தகவல். 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றன. Adfonic, Clicksor, or VigLink என்ற பெயர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை. ஆனால் அவை உங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். இவை எல்லாம் இணையச் செயல் பாட்டினைக் கண்காணிக்கும் வகையில் (Web tracking) செயல்படுபவை.
2. இந்த கண்காணிக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய அனைத்து தகவல் களையும் அறிந்து வைத்துள்ளன. இது பொய். இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவது இல்லை. உங்கள் பிரவுசர்கள் இயங்கு வதைத்தான் கண்காணிக்கின்றன. அந்த பிரவுசரை மற்றவர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பயன் படுத்துகையில் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பில்லையே. மேலும், நீங்கள் மற்றொரு பிரவுசரைப் பயன்படுத்து கையில் உங்கள் தேடல்கள் என்ன வென்று அறியவும் சந்தர்ப்பம் இல்லை. பொதுவாக இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பத் தேடல்களை அறிவதில்லை. ஒவ்வொரு கம்ப்யூட்ட ருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பதிவு செய்து, அந்த எண்ணின் அடிப்படையில் தான் தகவல்களைச் சேகரிக்கின்றன.
3. இணையக் கண்காணிப்பு புரோகிராம் கள் உங்கள் தனிநபர் விருப்பங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. இதில் பாதி உண்மை; பாதி உண்மை அற்றது. நீங்கள் இணையத்தில் கிளிக் செய்திடும் தளங்களுக்கான லிங்க்ஸ் பற்றி தகவல்கள் சேர்க்கப் படுகையில், உங்களின் தனி நபர் விருப்பங்கள் பட்டியலிடப்பட்டு தொகுக்கப்படுகின்றன. உங்களை அடையாளம் காட்டும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவையும் அவற்றின் வசம் கிடைக்கின்றன. எனவே ஓரளவிற்கு உங்கள் விருப்பங்களும் இந்த குக்கீஸ் மூலம், அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன. ஆனால் இந்த நிறுவனங்கள் தனிநபர் விருப்பங்களைப் பயன்படுத்துவதில்லை. எத்தகைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் கணித்து அவற்றை வேண்டுவோருக்கு அளிக்கின்றன.
4. இவற்றைத் தடை செய்திட சட்டத்தில் இடம் உள்ளது. இது உண்மை அல்ல. இணையத்தில் இத்தகைய செயல்பாடு களைத் தடை செய்திடும் சட்டம் இல்லை. அப்படியே வேறு சட்டப் பிரிவுகளுக்குள் இந்த செயல்பாட்டினைக் கொண்டு வந்தாலும், இதனை நிரூபிப்பது கடினம்.
5. மொபைல் போனில் இருப்பது போல, எனக்கு விளம்பரங்கள் வேண்டாம் எனத் தடை செய்திட முடியுமா? அந்த வசதி இல்லை. இணையக் கண்காணிப்பில் இருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளும் வசதி இல்லை. ஆனால், இத்தகைய குக்கீஸ்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றை உங்கள் அனுமதி யுடன் நீக்கும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து அவ்வப் போது இயக்கினால், நாம் இதிலிருந்து மீளலாம்.
6. இந்த கண்காணிக்கும் புரோகிராம்களைத் தடை செய்தால், இணையத்தில் விளம்பரங்கள் மறையும். வருமானம் குறைவதால், ஒவ்வொரு இணைய தளத்தினையும் பணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டும். இதுவும் தவறான ஒரு கருத்தாகும். இது விளம்பரங்களை அனுப்பிப் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் இட்டுக் கட்டிய கதை. விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கும் இன்டர்நெட் தொடர்ந்து இயங்குவதற்கும் அப்படிப்பட்ட ஓர் அடிப்படையான அமைப்பு இல்லை.

கம்ப்யூட்டர் பாதுகாப்பு






1. ஆண்ட்டி வைரஸ் (Anti Virus): அப்ளிகேஷன் சாப்ட்வேர். இன்றைய அளவில் கிடைத்துள்ள வைரஸ் புரோகிராம்களில் காணப்படும் சிக்னேச்சர் என்னும் கோடிங் முறையின் அடிப்படையில், ஹார்ட் டிஸ்க்கினை ஸ்கேன் செய்து, அதில் ஏதேனும் வைரஸ், ட்ரோஜன், வோர்ம் ஆகியன இருந்தால், அந்த புரோகிராம்களைக் கண்டறிந்து அழிக்கும். அல்லது குவாரண்டைன் என்னும் தனி இடத்திற்கு அனுப்பும். நமக்கும் எச்சரிக்கை கொடுக்கும். நீக்க முடியவில்லை என்றால், ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் இடத்தைக் காட்டி எச்சரிக்கை செய்திடும்.

2. அட்டாக் (Attack): நம் அனுமதி பெறாத ஒரு நபர் அல்லது ஒரு புரோகிராம், நம் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டில், பல்வேறு காரண காரியங்களுக்காகக் கொண்டு வரும் செயல்பாடு.

3.பேக் டோர் (Back Door): இதனைச் சில சமயங்களில் ட்ரேட் டோர் (Trap Door) எனவும் அழைக்கின்றனர். அப்ளிகேஷன் புரோகிராமில், புரோகிராமை வடிவமைத்தவரால் அமைக்கப்படும் வழி. புரோகிராமில் ஏதேனும் பிழை இருந்தால், இந்த வழியாக புரோகிராமின் வரிகளை அடைந்து செப்பனிடுவார். ஆனால் இது போன்ற வழி இருப்பது அடுத்தவருக்குத் தெரிந்தால், புரோகிராம் செயல்படும் தன்மையையே அவர் மாற்றிவிடலாம்.
4. பயர்வால் (Firewall): இது ஒரு சாப்ட்வேர் அல்லது ஹார்ட்வேர். உங்கள் கம்ப்யூட்டரின் நெட்வொர்க்கைக் காப்பாற்றும் வசதி. இன்டர்நெட் அல்லது நெட்வொர்க் மூலமாக அனுமதியின்றி, உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் புரோகிராமினைத் தடுத்து நிறுத்தும். உங்களுக்கும் எச்சரிக்கை தரும். சில வேளைகளில் உங்கள் அனுமதியைப் பெற்று அந்த புரோகிராமினை அப்போதும் அடுத்து வருகையிலும் அனுமதிக்கும்.
5.ஹைஜாக்கிங் (Hijacking) : கம்ப்யூட்டரின் செயல் பாட்டில் குறுக்கீடு செய்து, இயக்கத்தினை முடக்குவது. கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டி ருக்கும் நீங்கள், சற்று வெளியே செல்கையில், கம்ப்யூட்டரைக் கைப்பற்றி பயன்படுத்துவதனையும் இந்த வகையில் சேர்க்கலாம். அடுத்த வகை இன்டர்நெட் வழியாக நுழைந்து கம்ப்யூட்டரின் இயக்கத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்வது.
6. ஹோல் (Hole): உங்கள் சிஸ்டத்தின் பலவீனமான ஓர் இடம். உங்கள் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் சாப்ட்வேரில் இருக்கலாம். இதன் வழியாக உங்கள் அனுமதியின்றி ஒருவர் அனுப்பியுள்ள புரோகிராம், கம்ப்யூட்டர் உள்ளே வரலாம்.
7. எச்.டி.டி.ப்பி.எஸ். (HTTPS Hypertext Transfer Protocol Secure): இணையத்தில் உள்ள புரோட்டோகால் அம்சங்களில் இது எச்.டி.டி.பி.யில் ஒரு வகை. தனித்தன்மை கொண்ட, தனி நபர் அல்லது நிறுவனங்கள் சார்ந்த முக்கிய தகவல்கள் பரிமாறப்படும் தளங்களில் இந்த வகை புரோட்டோகால் வகை அமைக்கப்படும்.
8.கீ (Key) : விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் விண்டோஸில் அமைக்கப்படும் செட்டிங்ஸ் சரியாக அமைந்திட உதவுபவற்றை இப்படிக் குறிப்பிடுவார்கள். புரோகிராம் ஒன்று கம்ப்யூட்டரில் நிறுவப்படும் போதும், நீக்கப்படும்போதும் இந்த கீகள் மாற்றப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் நுழைந்து இந்த கீகளில் உங்கள் அனுமதியின்றி மாற்றங்கள் செய்திட்டால், கம்ப்யூட்டர் இயக்கம் பிரச்சினைக்குள்ளாகும்.
9. கீ லாக்கர்ஸ் (Keyloggers) : அடிப்படையில் இது புரோகிராம் ஒன்றில் கீகளின் அழுத்தம் பயன்பாட்டிற்காகப் பதியப்படுவதனைக் குறிக்கும். ஆனால் இப்போதோ, கெடுதல் விளைவிக்க எண்ணும் நபர்கள், கம்ப்யூட்டர் ஒன்றில் அழுத்தப்படும் கீகளைப் பதிவு செய்திட ஸ்பைவேர் புரோகிராம்களை அனுப்பி, கீகளின் அழுத்தங்களைப் பெற்று, அதன் அடிப்படையில் ரகசியமான தகவல்களைப் (பாஸ்வேர்ட் போன்ற) பெற்று, பின் அவற்றைப் பயன்படுத்தி நாசம் விளைவிக்கும் எண்ணத்தில் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
10. @mm : வைரஸ் ஒன்றின் இறுதியில் இந்த அடையாளம் காணப்படும். எடுத்துக் காட்டாக W32netsky@mm. இந்த அடையாளம் மாஸ் மெயிலர் என்பதைக் குறிக்கிறது. மாஸ் மெயிலர் என்பது வைரஸ் ஒன்றின் பெயர். இதனால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கின் பல பகுதிகளிலிருந்து, மின்னஞ்சல் முகவரிகளைப் பெற்று, அவை அனைத்துக்கும் தன் செய்தி அஞ்சலை அனுப்பும். பின் அனுப்பப்பட்ட கம்ப்யூட்டரில் பரவும். சிலவற்றில் ஒரு எம் (m) மட்டும் காணப்படும். அது மெயிலர் என்பதை மட்டும் குறிக்கிறது. இந்த வகை மெயிலர் வைரஸ் தான் பரவுவதற்கு ஒரு இமெயிலின் துணையைக் கொள்ளும்.
11. பே லோட் (PayLoad): இது வைரஸ் ஒன்றின் பகுதியாகும். இது எப்போதும் அழிவைத்தரும் செயல்களில் இறங்காது; ஆனால் தேவையில்லாத ஒன்றாகும்.
12. ரெப்ளிகேஷன் (Replication) ): பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை ஒரு வைரஸ் பாதித்தவுடன், அது தன்னையே காப்பி செய்து கொள்ளும் பணியில் இறங்கும். பின் அந்தக் கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களையும் பாதிக்கும்; இமெயில் முகவரிகள் மூலமாக மற்ற கம்ப்யூட்டர்களையும் பாதிக்கும். அடுத்த கம்ப்யூட்டரை அடைந்தவுடன் இதே வேலையை மேற்கொள்ளும். இவ்வாறு சில நிமிடங்களில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களில் பரவி கெடுதல் வேலையை நடத்தும். தன்னைத்தானே காப்பி செய்திடும் வேலையை இந்த சொல் குறிக்கிறது.
13. வேரியன்ட் (Variant): வைரஸ் புரோகிராம் ஒன்றில், ஒரிஜினல் வைரஸ் புரோகிராம் வரிகளைப் போன்று அமைக்கப்படுவை இப்படிக் குறிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் பணியைத் திசை திருப்பும் வேலையை இவை மேற்கொள்கின்றன.
14. வைரஸ் டெபனிஷன்ஸ் பைல் (Virus Definition File): ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களால் பயன்படுத்தப் படும் டேட்டா பைல்களாகும். இவற்றின் மூலம் தான் ஏற்கனவே உலவி வரும் வைரஸ் புரோகிராம்கள் கண்டறியப்படுகின்றன.

சிடி (CD) பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற


அனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. மற்ற டேட்டா பைல்களை மாற்றுவது போல அனைத்து பாடல்களையும், கம்ப்யூட்டருக்குக் காப்பி செய்திட முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு. இதனை ரிப்பிங் (ripping) எனக் குறிக்கின்றனர்.

முதலில் இந்த “rip” என்ற சொல் சரியாக எதனைக் குறிக்கிறது? சிடி ஒன்றிலிருந்து டேட்டாவைக் காப்பி செய்து அவற்றின் பார்மட்டுகளை மாற்றி வேறு சிடி அல்லது டிவிடிக்குக் கொண்டு செல்வதனை ரிப்பிங் என்கிறோம்.

இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் இது பெரும்பாலும் மியூசிக் டேட்டா வினையே குறிக்கிறது. சிடியிலிருந்து இசைப் பாடல்களை வெளியே எடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவதுதான் ரிப்பிங். பொதுவாக இந்த பைல்கள் காப்பி ஆகையில் .wma என்ற பார்மட்டில் காப்பி ஆகும்.

ரிப்பிங் குறித்து தெரிந்து கொண்டால் சிடியிலிருந்து மட்டுமல்ல வேறு மீடியாக்களிலிருந்தும் இன்டர் நெட்டிலிருந்தும் பாடல்களை காப்பி செய்வது எளிதாகும். ரிப்பிங் செய்வதும் எளிதுதான். எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.


1. முதலில் இதற்கு விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 10 அல்லது அதற்குப் பின் வந்தது இருக்க வேண்டும். இதனைத் திறந்து கொள்ளுங்கள். பின் எந்த சிடியிலிருந்து பாடலை ரிப் செய்திட வேண்டுமோ அதனை சிடி டிரைவில் போட்டுவிடவும்.

2. வழக்கம்போல், உடனே சிடியில் உள்ள பாடல்கள் இசைக்கத் தொடங்கும். அவ்வாறு பாடல்கள் இசைக்கப் படவில்லை என்றால் File, Open கிளிக் செய்திடுங்கள். அங்கு “Look in:” என்ற டேப்பின் கீழாக சிடி டிரைவில் உள்ள சிடியைத் தேடுங்கள். எந்த மியூசிக் பைல்களை எல்லாம் ரிப்பிங் செய்திட முடிவு செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இவற்றை இயக்க விண்டோஸ் மீடியா பிளேயரில் Open மீது கிளிக் செய்திடவும்.

3. இப்போது தோன்றும் திரையின் மேலாக ஆறு டேப்கள் கிடைக்கும். அவை: Now Playing, Library, Rip, Burn, Sync and Guide. ஆகும். Now Playing பட்டியலில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் பைல்கள் இருக்கும். Rip டேப்பினைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலும் இந்த பாடல் பைல்கள் இருக்கும். அனைத்து பாடல்களும் வேண்டாமே! சில மட்டும் போதும் என்று எண்ணுகிறீர்களா! அதற்கு வழி உள்ளது.

4. ஒவ்வொரு பாடலின் தலைப்புக்குப் பக்கத்தில் ஒரு செக் மார்க் இருக்கும். இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி, சிடியில் உள்ள அனைத்து பாடல்களையும் காப்பி செய்திட விரும்பாவிட்டால், நீங்கள் எந்த எந்த பாடல்களை ரிப்பிங் செய்திட வேண்டுமோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். விருப்பப்பட்ட பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தவுடன் ஸ்கிரீனில் வலது பக்க மூலையில் Rip என்பதில் கிளிக் செய்திடுங்கள். பாடல்கள் ரிப் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவாகும்.

5. இந்த செயல் முடிந்தவுடன் சிடியை எஜெக்ட் செய்து வெளியே எடுக்கவும். நீங்கள் ரிப் செய்த பாடல்கள் அனைத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரின் லைப்ரேரியில் காணப்படும். லைப்ரேரியில் தான் நீங்கள் எந்த நேரமும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதற்கான பாடல்கள் அனைத்தும் இருக்கும்.

6. லைப்ரேரியில் உள்ள பாடல்களை நீங்கள் வழக்கம் போல உங்கள் பிரியப்படி வகைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். பாடலின் பெயர், பொருள்வகை, மியூசிக் டைரக்டர் என எந்த வகையிலும் வகைப்படுத்தி பைல் செய்து வைத்துக் கொள்ளலாம்.

ஓகே! விண்டோஸ் மீடியா பிளேயர் இல்லாதவர்கள் என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்களா? விண்டோஸ் சிஸ்டத்துடன் வந்ததை அழித்து விட்டீர்களா? கவலைப்பட வேண்டாம். http://en.softonic.com/s/freewindowsmediaplayer12 என்ற தளம் சென்று இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

Monday, 26 December 2011

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க



ஜிமெயில் தளத்தில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மெயில் அக்கவுண்ட்களை வைத்திருப்பார்கள். ஆனால், ஒரு வேளையில், ஒரு அக்கவுண்ட்டை மட்டுமே திறந்து பயன்படுத்த முடியும். ஒன்றைத் திறந்து மெயில்களைப் படித்து முடித்த பின்னர், அந்த அக்கவுண்ட்டினை மூடிய பின்னரே அடுத்ததைத் திறந்து பயன்படுத்த முடியும்.
ஆனால், அண்மையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களைத் திறந்து பயன்படுத்தும் வசதியை, கூகுள் வழங்கியுள்ளது. இதனை multiple signin என அழைக்கிறது இதனைச் செயல்படுத்த கீழ்க்கண்டபடி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
1. ஜிமெயில் இணையதளத்தில், செட் அப் (setup) பக்கம் செல்லவும். உங்களுடைய வெப் பிரவுசரில், எந்த கூகுள் அக்கவுண்ட்டையும் இயக்கவில்லை எனில், உங்கள் அக்கவுண்ட்டிற்கான தகவலைத் தரச் சொல்லி, ஜிமெயில் கேட்கும்.
2. இப்போது On Use multiple Google Accounts in the same web browser என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இவ்வாறு பல அக்கவுண்ட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஏற்படும் விளைவுகள் வரிசையாகத் தரப்பட்டிருக்கும். அவற்றிற்கான செக் பாக்ஸ்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, புரிந்து கொண்டதை ஏற்றுக் கொள்ளவும்.
3. அடுத்து Save என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி multiple signin செயல்படுத்தப்பட்டதால், கூகுள் மெயில் பட்டியலில், நீங்கள் அடுத்த அக்கவுண்ட் களுக்கான தகவல்களைத் தரலாம்.
1. ஜிமெயில் தளம் செல்லவும். முதலில் நீங்கள் பயன்படுத்திய அக்கவுண்ட் மூலம் அதில் நுழையவும். இந்தப் பக்கத்தின் வலது மேல் மூலையில், உங்கள் பெயரின் மீது கிளிக் செய்தால், அக்கவுண்ட் ஆப்ஷன்ஸ் கிடைக்கும். கிடைக்கும் மெனுவில் Switch account என்பதைக் கிளிக் செய்திடவும். அடுத்து Sign in to another account என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய லாக் இன் பக்கம் திறக்கப்படும்.
3. இங்கு புதிய அக்கவுண்ட்டிற்கான தகவல்களைத் தரவேண்டும். தந்த பின்னர், Sign in. என்பதில் கிளிக் செய்தி டவும். இப்படியே சேர்க்க வேண்டிய ஒவ்வொரு அக்கவுண்ட்டிற்கும் தகவல்களைத் தரவும்.
உங்கள் அக்கவுண்ட்களின் தகவல் களைத் தந்த பின்னர், ஒவ்வொரு ஜிமெயில் அக்கவுண்ட்டினையும் அடுத் தடுத்து திறந்து பயன்படுத்தலாம். முதலில் திறந்தவற்றை மூட வேண்டிய தில்லை. முன்பு போல அக்கவுண்ட் ஆப்ஷன்ஸ் பெற்று, அதில் நீங்கள் விரும்பும் அக்கவுண்ட்டில் நுழையலாம்.
எல்லாம் முடிந்த பின்னர், அக்கவுண்ட்களை மூட, ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை. மொத்தமாக அனைத்தையும் மூடலாம்.