ismayil singam.blogspot.com

Saturday, 7 January 2012

கல்யாணத்துக்கு நான் ரெடி! நீங்கள் ரெடியா? என கேட்கும் பிரா!



ஜப்பான் நிறுவனமான டிரிம்ப் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள புதிய பிரா ஜப்பான் தாய்மார்களை அலற வைத்திருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்களை திருமணத்துக்கு தயார் என்று அறிவிக்கும் வகையில் அணியும் பிரா இது. திருமணம் நாடிஎன்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிராவில் டைமர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
 இதில் இருந்து பீப் ஒலி ஒலித்துக்கொண்டே இருக்கும். அதற்கு சற்று மேலாக திருமண மோதிரத்தை வைக்கும் துளை உள்ளது. டைமரின் சத்தத்தை நிறுத்தவேண்டுமானால், இந்த துளையில் மோதிரத்தை வைக்கவேண்டும்.இந்த பிராவின் இடது புறம் பேனா பாக்கெட்டும், வலது ஓரத்தில் ஸ்டாம் ப் சீல் வைக்கும் பாக்கெட்டும் உள்ளன. இவையிரண்டும் திருமணத்தின் போது தேவையானவை என்பது குறிப்பிடத்தக்கது.தங்கள் திருமண ஆசையை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும், திருமணத்திற்கு தாங்கள் தயார் என்று ஆண்களுக்கு சமிக்ஞை தரவும் உதவும் இந்த பிரா விற்பனைக்கு வந்திருந்தால் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிவிட்டிருக்கும். நல்லவேளைஅறிவுப்பூர்வமான கண்டுபிடிப்பு இது. ஆனால், விற்பனைக்கு அல்ல என அறிவித்துவிட்டது டிரிம்ப் இண்டர்நேஷனல் நிறுவனம்.
இதுமட்டுமல்ல ஜப்பான் பல ப்ரா புரட்சிகளை அவ்வப்போது செய்து வருகிறது.

No comments:

Post a Comment

Pages (120)1234 Next