ஒரு விஷயத்தை சுருக்கமா சொல்ல ட்விட்டர், பஸ் எல்லாம் உண்டு. அதே விஷயத்தை விளக்கமா சொல்ல உங்களுக்குன்னு நேர்ந்து விட்டதுதான் ப்ளாக். இந்த வசதியை நமக்கு Blogger, Wordpress ன்னு ரெண்டு பேர் தராங்க. பிளாக்கர்ல தான் எனக்கு அனுபவம் அப்படிங்கறதால அது சம்பந்தமாவே எனக்கு தெரிஞ்ச விளக்கத்தை தரேன்.
1. www.blogger.com அப்படிங்கற அட்ரஸ் ல போங்க.
2. Left side ல Create a new blog-> get started அப்படின்னு இருக்கற பட்டனை கிளிக் பண்ணுங்க. ஒரு புது விண்டோ Open ஆகும் .
3. அதுல உங்க மெயில் ஐடி மற்றும் மத்த விஷயங்கள குடுத்துடுங்க.
4. அதுலயே Display name ன்னு ஒண்ணு கேட்கும். நிஜ பெயர் குடுக்கறவங்க நிஜ பேர் குடுங்க. புனைபெயர்ல எழுதணும்னு நினைக்கறவங்க அந்த பெயரை குடுங்க.
இதோட முதல் விண்டோல வேலை முடிஞ்சுது. அடுத்தது next குடுத்ததும் "Name your blog" ன்னு ஒரு விண்டோ வரும். அதுல,
1. Blog title அப்படிங்கற இடத்துல உங்க Blog heading ஆ என்ன வரணும்னு நினைக்கறீங்களோ அதை டைப் பண்ணுங்க. மேல கொட்டை எழுத்துல சாதாரணமானவள் ன்னு எழுதி இருக்கே, அதான் blog title. இது தமிழ்ல வரணும்னா உங்க mail அ திறந்து compose ல வெச்சு, மொழி தேர்வு செய்யற பட்டனை கிளிக் பண்ணி அதில் தமிழை தேர்ந்தெடுத்துக்கோங்க. இதுக்கு நீங்க தமிழ் typing தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லை. வாங்க அப்படின்னு டைப் பண்ண vanga அல்லது vaanga ன்னு டைப் செய்தால் போதும். வேறு வார்த்தைகள் காண்பித்தால் backspace அடித்து அது காட்டும் options ல choose பண்ணிக்கலாம். ரொம்ப ஈஸி. (இந்த முறையில் தான் நீங்கள் உங்கள் தளத்திலும் பதிவு எழுதப்போகிறீர்கள்.)
உங்கள் பெயர் தமிழில் வர எண்ணினால் இந்த முறையை பின்பற்றி மெயிலில் டைப் செய்து copy செய்து இந்த blog title கேட்கும் இடத்தில் paste செய்யுங்க.
2. அடுத்து blog address. என் ப்ளாக் அட்ரஸ் http://ismayilsingam.blogspot.com/ . அது போல உங்களுக்கும் ஒரு அட்ரஸ் உருவாக்கிக்கொள்ளலாம். நான் அட்ரஸ், பெயர் ரெண்டுமே சாதாரணமானவள் ன்னு வெச்சுக்கிட்டேன். சிலர் ப்ளாக் அட்ரஸ் ஒண்ணும், ப்ளாக் டைட்டில் ஒண்ணும், டிஸ்ப்ளே நேம் ஒண்ணும் வெச்சுக்கறாங்க. உங்கள் விருப்பம் எப்படியோ அப்படி வெச்சுக்கோங்க. Blog URL அப்படின்னு இனி எங்கே mention பண்ணி இருந்தாலும், அங்கே நீங்க குடுக்க வேண்டியது இந்த அட்ரஸ் தான்.
அடுத்தது Choose Template
இங்க உங்க blog என்ன background ல என்ன கலர்ல தெரியனும்னு நினைக்கறீங்களோ, உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை தேர்ந்தெடுத்துக்கோங்க. இப்போதைக்கு ஒண்ணை வெச்சுக்கிட்டு, பின்னாடி மாத்திக்கறதுன்னாலும் Edit Template போய்
மாத்திக்கலாம்.
இதை முடிச்சதும் உங்களுக்கே உங்களுக்குன்னு ஒரு ப்ளாக் ரெடி :)
No comments:
Post a Comment