ismayil singam.blogspot.com

Sunday, 8 January 2012

முருங்கைக்காய் மேட்டர் உண்மைதானா.?

முருங்கைக்காய்ன்ற பேரைக்கேட்டாலே நமக்கெல்லாம் நியாபகத்துக்கு வர்றது பாக்யராஜ் கெளப்பிவிட்ட கில்மா சமாச்சாரம்தான். சம்சாரத்துக்கெல்லாம் புருஷனோட ஆசையை கிளறிவிட்டு கெஞ்சவெக்கிறதுக்கான ஆயுதமா முருங்கைக்காய் சமாச்சாரம் பதிஞ்சிபோச்சு. ஆனா உண்மையிலேயே இந்த முருங்கைக்காய் சமாச்சாரம் நெசந்தானான்னு ஆராய்றதுக்கு முன்னாடி அது என்ன சமாச்சாரம்னு தெரியாத இளசுங்களுக்கெல்லாம் ஒரு முன்னோட்டம் குடுத்துரலாம்…
பாக்யராஜோட ‘முந்தானைமுடிச்சி’ன்ற படம்தான் இந்த விசயத்துக்கு அடிபோட்டு இன்னக்கிவரைக்கும் பல தமிழ் சினிமாவுலேயும், ஏன் இந்தி சினிமால கூட இந்த விசயத்தை பத்திப்பேசுற அளவுக்கு செய்ஞ்சிடுச்சி. அந்தப்படத்துல பாக்யராஜீக்கும் ஹீரோயின் ஊர்வசிக்கும் ஒரு இக்கட்டான சூழல்ல கல்யாணம் நடந்திரும். பாக்யராஜ் கல்யாணத்துக்கு அப்புறம் ஊர்வசிகிட்ட போகாம ஒதுங்கியேஇருப்பார். அப்போ ஏதோவொரு பெருசு ஒன்னு ஊர்வசிக்கு முருங்கைக்காய் ஐடியாவைக் குடுத்துரும். உடனே ஊர்வசியும் அன்னக்கி முருங்கைக்காய் பொறியல், முருங்கைக்காய் ரசம், முருங்கைக்காய் சாம்பார்னு சமையல் எல்லாம் முருங்கைக்காயா செய்ஞ்சி வைச்சிரும்.
பாக்யராஜ் வீட்டுக்கு வந்ததும் ஆஹா சமையல் எல்லாமே நல்லா டேஸ்ட்டாயிருக்குன்னு சொல்லி முருங்கைக்காய் அயிட்டங்களை நல்லா கட்டு கட்டுன்னு வயிறு ஃபுல்லா கட்டிருவாரு. அப்புறமா தூங்கலாம்னு படுக்குற பாக்யராஜிக்கு ஃபுல்லா மூடு கெளம்பி ஊர்வசிகிட்ட போகவும் முடியாம, உணர்ச்சிகளை அடக்கவும் முடியாம அவஸ்தைப்படுவாரு பாருங்க. அப்போதாங்க இந்த முருங்கைக்காய் மேட்டர் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சாயிடிச்சி. அன்னைலயிருந்து இன்னக்கி வரைக்கும் பல சினிமாவுல இந்த முருங்கைக்காய் மேட்டரை யூஸ் பன்றாங்கன்னா அந்த பெருமையெல்லாம்(!) சத்தியமா பாக்யராஜைத்தான் சேரும். இது நெசமா… பொய்யான்னு தெரியாமலேயே அந்த மாதிரி மேட்டருன்றதால மக்கள் மனசுல பச்சக்குன்னு பதிஞ்சிபோச்சு.

சரி… அறிவியல்ரீதியா முருங்கைக்காய்க்கு நிஜமாகவே ‘அந்த’ உணர்ச்சிகளை தூண்டுற சக்தியிருக்கா?… அந்த உணர்ச்சிகளைத்தூண்டுற சக்தி பல விஷயங்கள்ல இருக்குதான். ஆனா முருங்கைக்காய்ல சத்தியமா அந்த மாதிரி எதுவும் இல்லைன்றதுதான் விஞ்ஞானமும் மருத்துவமும் சொல்ற சேதி. இந்த மாதிரி தமிழ்சினிமா கிளப்பிவிட்ட மகத்தான மருத்துவத்தால பலபேரு இந்த விஷயத்துல பி.ஹெச்.டி ரேஞ்சுக்கு ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்சவிஷயம்தான் முருங்கைக்காய்ல அந்தமாதிரியெல்லாம் எதுவும் இல்லைன்றது.
முருங்கைக்கீரைல சிட்ரஸ் பழங்களைவிட ஏழுமடங்கு விட்டமின் ‘சி’யும், கேரட்டைவிட நாலு மடங்கு விட்டமின் ‘ஏ’யும் பாலில் இருப்பதைவிட நாலு மடங்கு கால்சியமும் வாழைப்பழத்தில் இருப்பதை விட மூன்று மடங்கு பொட்டாசியமும்தான் நிறைய இருக்குது. அப்படித்தான் முருங்கைக்காய்லகூட… மற்றபடி நம்ம ஹார்மோன்களை தூண்டுற எந்த சமாச்சாரமும் அதுல இல்லைங்க.
உண்மையிலேயே அந்த மாதிரி விஷயத்துக்கு சிறந்த உணவு என்னான்னா…
1)இரவு படுக்குறதுக்கு முன்னாடி மிதமான சூட்டுல ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்.
2)அவ்வப்போது பேரிச்சம்பழம் நிறைய சாப்பிடலாம்.
3)வெங்காயம் பச்சையா சாலட் மாதிரி நிறைய சாப்பிடலாம்.
4)உலர் பழங்கள் மற்றும் பாதாம் முந்திரி பருப்புகளும் அதுக்கான சக்தி கொண்டதுதான்.
அதனால முருங்கைக்காய் மேட்டரும் தெருவோரம் லேகியம் விக்கிறமாதிரியான டூப்ளிகேட் சமாச்சாரம்தான்றதை ஜனங்க புரிஞ்சிக்கிட்டா சரிதான். இப்படி எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது இனிமேலும் நாம முருங்கைக்காய் சமாச்சாரத்தை நெசமுன்னு நம்பிக்கிட்டு இருந்தா அதுக்குமேல நான் சொல்றதுக்கு ஒன்னுமில்லைங்க…!

No comments:

Post a Comment