ismayil singam.blogspot.com

Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, 23 January 2012

தெரிந்தோ தெரியாமல் சிறுவயதில் செய்த தவறுகளினால்

தெரிந்தோ தெரியாமல் சிறுவயதில் செய்த தவறுகளினால் உங்களால் எதுவுமே முடியலியா? உடல் சிறுத்துப் போய் சோர்வாக தோற்றமளிக்கிறீர்களா? உற்சாகமே இல்லாமல் இருக்கிறதா? சாப்பாடு உடலில் ஒட்டவில்லையா? கை நடுங்குகிறதா? பயமாக இருக்கிறதா? வேதனைகளும் சோதனைகளும் கைகோர்த்து வருகிறதா?

கவலையே வேண்டாம், ஆறு தலைமுறைகளாக சேலத்திலேயே இருந்து ஆராய்ச்சி செய்து கண்டறிந்த வைத்தியமுறையால் உங்கள் அனைத்து பிரச்சனைகளும் ஐந்தே நிமிடத்தில் குணமடையும். 

எங்கள் வைத்தியமுறையின் படி உங்களுக்கென சிறப்பாக தயாரித்துக் கொடுக்கப்படும் கயிறை வாங்கி கழுத்தில் கட்டிக் கொண்டு தொங்கினீர்கள் என்றால் ஐந்தே நிமிடத்தில் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்வது உறுதி. 

சாதா ட்ரீட்மெண்ட்: ரூ 5999



ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 9,999

சூப்பர் ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 15,999


அடுத்த விளம்பரத்தில் எங்களிடம் கயிறு வாங்கி தொங்கியவர்களின் பேட்டி எடுத்துப் போடப்படும், தவற விடாதீடாமல் பார்த்து மகிழுங்கள்!