அட போப்பா, காலங்கார்த்தால கார் பார்க்குல வந்து டிஸடர்ப் பண்ணாத.
ஐயா தர்ம தொரை எதுனாச்சும் குடுங்கய்யா.
சரி சரி, இங்க வா. இந்த டீ கடையில ஒரு டீ சாப்பிடு. பில்லை நான் குடுக்கறேன்.
இல்லீங்கய்யா. டீ, காப்பி அல்லாம் கெட்ட பழக்கம் அய்யா. நான் சாப்பிட மாட்டேங்கய்யா.
என்னாது? அப்டீன்னா இந்தா இந்த சிகரெட்டை வச்சுக்க. ட்ரிபிள் ஃபைவ் ரொம்ப நல்ல பிராண்டு.
இல்லீங்கய்யா, சிகரெட் புடிக்குறது ரொம்ப கெட்டபழக்கம் அய்யா. வாணாங்க அய்யா.
இது என்னப்பா வம்பாப் போச்சு. இந்த கடையில ஒரு பாட்ட்ல் பீர் வாங்கிக்க. நான் பணம் கொடுத்துடறேன்.
வாணாங்கய்யா, குடிக்குறது ரொம்ப கெட்ட பழக்கங்க அய்யா. வாணாங்கய்யா.
அடக் கடவுளே! கடசியா உனக்கு ஒரு சான்ஸ் தரேன். நான் இப்ப ரேஸ் ஆடறத்துக்குதான் போயிட்டு இருக்கேன். முதல் ரேஸ்ல உன் பேர்ல பணம் கட்டறேன். எவ்ளோ கெடச்சாலும் எல்லாத்தையும் நீயே வச்சுக்கலாம். என்ன சொல்றே?
மன்னிச்சுக்கங்க அய்யா. ரேஸுக்கு போறது ரொம்ப கெட்ட பழக்கம் அய்யா. வாணாங்க அய்யா.
அடடா! இந்தா என் விசிட்டிங் கார்டு. இன்னிக்கு சாயங்காலம் என்ன வீட்டுல வந்து பாரு!
ரொம்ப தாங்க்ஸ் அய்யா. கண்டிப்பா வர்றேங்க அய்யா. வூட்டுக்கு வந்தா எதுனாச்சும் தரீங்களா அய்யா?
...
...
...
...
...
...
...
...
...
அது இல்லப்பா... எந்த கெட்ட பழக்கமுமே இல்லாத ஒரு ஆளு எப்டி இருப்பான்னு என் பொண்டாட்டிக்கு காட்டணும், அதான்!
No comments:
Post a Comment