ismayil singam.blogspot.com

Tuesday, 3 July 2012

மின்கட்டண அட்டவணை.

மின்சாரத்தை தொட்டால்தான் நமக்கு ஷாக் அடிக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக மின்கட்டணத்தை பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஷாக் அடிக்கின்றது. தொடாமலே ஷாக் அடிக்கும் அளவிற்கு என்ன உள்ளது என்கின்றீர்களா? உயர்ந்துள்ள மின்கட்டணங்கள் தான்.கரண்ட் எங்கே ஒழுங்காக வருகின்றது.. இதில் மின்கட்டணம் எவ்வளவு வந்துவிடபோகின்றது என கேட்கின்றீர்களா? 10 மணிநேரம் மின்தடை செய்து 14  மணிநேரம் மின்சாரம் மின்சார பயன்பாட்டிற்கு எவ்வளவு வந்துவிடப்போகின்றது என்கின்றீர்களா ? கீழே உள்ள கட்டண விகிதத்தை பாருங்கள். நெருக்கிய உறவினர் - நண்பர் திடீரென்று மறைந்துவிட்டால் நம்மால் அவரின் இழப்பை தாங்க முடியாது. ஆனால் அவர்களே உடல் நிலை சரியில்லை - தேறுவது கடினம் என தெரியவரும்போது நமது மனது தன்னால் அந்த துயரத்தை தாங்கிகொள்கின்றது. அதுபோல் உங்களுக்கான மின்கட்டணம் திடீரென்று அதிகமாக வந்துஉள்ளது என நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிட கூடாது என்கின்ற அக்கறையில் இந்த அட்டவணையை பதிவிடுகின்றேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம் இது எம்மாத்திரம் என்கின்றீர்களா? கவலைப்படாதீர்கள்....இதுவும் கடந்துபோகும்..

சரி கட்டண விவரம் பற்றி கீழே பார்க்கலாம்.
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75.
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் 
முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்தவேண்டும்)

கடைகளுக்கானது:-

1-100 யூனிட் வரை ரூபாய் 4.30.
100 யூனிட்டுக்கு மேல உபயோகித்தால் 1 யூனிட் விலை ரூபாய் 7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிறகு 120 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

உங்களுக்கான அட்டவணை கீழே:-

வீடு இணைப்புக்கானது.




கடை இணைப்புக்கானது.



நீங்கள் நான்கு ஸ்லாப்களில் (நிலைகள்)எந்த ஸ்லாப்பில் வருகின்றீர்களோ அதை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.உதாரணத்திற்கு நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் நீங்கள் 460.00 ரூபாய் செலுத்தவேண்டும்.. கூடுதல் 10 யூனிட்டுக்கு 140.00 ரூபாய் அதிகம் செலுத்தவேண்டும்.அப்போழுது உங்களுக்கு ஒரு யூனிட் விலை 14.00 ரூபாயாக மாறிவிடுகின்றது.உங்கள் மீட்டரில் 150 யூனிட் வரும் சமயம் முதல் சிக்கனத்தை கடைபிடியுங்கள். அவசியமில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி பணத்தை செலவழிக்காதீர்கள்.

Monday, 7 May 2012

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும்

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்:

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

* உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.


  1. அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்ந்ததைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.
  2. ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர்.
  3. அருகம்புல்லை சித்தர்கள் ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர்.
  4. அருகம்புல்லின் கணுக்களை நீக்கிவிட்டு 10 கிராம் அளவு எடுத்து, அதனுடன் வெண்மிளகு 10 சேர்த்து 4 டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, பாதியாக வற்றியதும், அதில் சிறிதளவு பசு வெண்ணெய் சேர்த்து குடித்துவர, மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் வெப்பம், நீர் கடுப்பு, மூலக்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்றவைக் குணமாகும்.
  5. தீராத வயிற்றுவலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையை சமஅளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவு குடித்துவர குணமாகும்.
  6. அருகம்புல்லுடன் மாதுளை இலையை சேர்த்து கஷாயமாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மில்லி அளவு குடித்துவர பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.
  7. வெட்டுக்காயம் ஏற்பட்டால் உடனே அருகம்புல்லுடன் அரிவாள் மூக்கு பச்சிலையை சேர்த்து அரைத்து வைத்துக்கட்ட ரத்தம் வடிவது உடனே நிற்பதுடன், காயமும் வெகுவிரைவில் ஆறிவிடும்.
  8. அருகம்புல்லுடன் மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசிவர வலியும், வீக்கமும் குறையும்.
  9. ஒரு பிடி அருகம்புல், மிளகு-10, சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிக்க, உடலில் சேர்ந்துள்ள மருந்துகளின் நஞ்சினை அது போக்கிவிடும்.
  10. அருகம்புல் வேர், ஆவாரம்பூ – இவை இரண்டையும் நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து, அதை நெய்யுடன் கலந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
  11. அருகம்புல் வேரையும், அகத்தி வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை காய்ச்சி வடிகட்டி குடித்துவர நீர் எரிச்சல், ஆண் குறி எரிச்சல் குணமாகும்.
  12. அருகம்புல் 2 பங்கு, கீழாநெல்லி ஒரு பங்கு சேர்த்து அரைத்து, அதை தயிரில் கலந்து குடிக்க சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியாகுதல், உடல் வறட்சி போன்றவை குணமாகும். உடல் வெப்பம் தணியும்.
  13. அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்துவர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கிவிடும். சிறுநீர்ப்பை பலப்படும்.
  14. அருகம்புல்லுடன் வெண்தாமரை பூவிதழ்களை சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை குடித்துவர இதய பலவீனம் நீங்கி, இதயமும், ரத்தக் குழாய்களும் உறுதிபெறும்.
  15. அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சிக் கொள்ளவும். இதனை உடலில் தேய்த்து குளித்துவர எல்லாவித தோல் நோய்களும் குணமாகும். அதை, தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத்தொல்லை நீங்கும். உடல் குளிர்ச்சியாகும்.
  16. அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும்.
  17. அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடிகட்டி, அதனுடன் வெல்லம் தேவையான அளவு சேர்த்து பருகிவர சிறு நீரக நோய்கள் குணமாகுவதுடன், உடலும், முகமும் அழகு பெறும்.
  18. நரம்பு தளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் நீங்கும்.
  19. மலச்சிக்கல், தூக்கமின்மை குணமாகும்.
  20. வயிற்றின் அமிலத் தன்மை குறையும்.
  21. உடலில் தேங்கியுள்ள கழிவுகள், விஷத்தன்மை வெளியேறும்.
  22. நீரிழிவு, தொழுநோய், கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும்.
  23. பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை விலகும்.
  24. உடலுக்கு அழகும், வசீகரமும் தரும்.
  25. உடல் வெப்பம் தணியும்.
  26. இந்த பலன்களை நீங்களும் பெறவேண்டுமா? தினமும் டீ, காபிக்கு பதிலாக அருகம்புல் சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து சாப்பிடுங்கள்.
  27. ஒரே ஒரு “நிபந்தனை” தினமும் காலையில் வெறும் வயிற்றில் தான் இதை குடிக்க வேண்டும். அப்போது தான் பலன் உண்டு.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.

Saturday, 4 February 2012

தமிழ்99 விசைப்பலகை தாங்க உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.

தமிழ்99

தமிழ்99 விசைப்பலகை தாங்க உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.
tamil99.JPG
மேல இருக்கிறது தாங்க அந்த விசைப்பலகை !
இதில என்ன சிறப்பா?
1. விசையழுத்தங்கள் (keystrokes) ரொம்ப குறைவுங்க. இது தான் முதன்மையான சாதகம். அடுத்து வர்ற சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு அதிகம் மெனக்கட வேண்டி இருப்பதால் பல சமயம் ஜன்னல் என்று எழுதுவதற்கு சன்னல் என்று எழுதுவதால், கிரந்த எழுத்துக்களின் அனாவசியத் தேவையை ஒழிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்கில முறைக்கும் தமிழ்99 முறைக்கும் தேவைப்படும் விசையழுத்தங்களைப் பார்ப்போம்.
சொல் romanised தமிழ்99 keystrokes saved
தொழிலாளி thozilaa+SHIFT+li த ஒ ழ இ ல ஆ ள இ 3
வெற்றி ve+SHIFT+r+SHIFT+ri வ எ ற ற இ 2
கணையாழி ka+SHIFT+naiyaazi க ண ஐ ய ஆ ழ இ 4
தந்தம் thantham த ந த ம f 3
உயிரெழுத்துக்கள், அகர உயிர்மெய்யெழுத்துக்களை எப்படி உள்ளிடுவதென்று விசைப்பலகையை பார்த்தாலே புரியும். இனி, பிற உயிர்மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் ஒரு சுருக்கமான வழிகாட்டி.
எழுத்து விசை வரிசை
த் த f
தா த ஆ
தி த இ
தீ த ஈ
து த உ
தூ த ஊ
தெ த எ
தே த ஏ
தை த ஐ
தொ த ஒ
தோ த ஓ
தௌ த ஔ
2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே ஒழிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு,
சொல் விசைகள்
புள்ளி பு ள ள இ
கன்று க ன ற உ
தங்கம் த ங க ம f
தந்தம் த ந த ம f
வெற்றி வ எ ற ற இ
3. பழகிக்கிறது எளிது. எழுத்துக்கள் இருக்கிற இடங்கள நினைப்புல வைச்சிக்கிறதும் எளிது. உயிரெழுத்துக்கள் ஒரு பக்கமாகவும் அகர உயிரெழுத்துக்கள் இன்னொரு புறமாகவும் ஒழுங்காக ஒரு வரிசையில் அமைஞ்சிருக்கு. அகர உயிர்மெய்யெழுத்துக்கள் அமைஞ்சிருக்கிறதுலயும் நெருக்கமான எழுத்துக்கள் அருகே அருகே இருக்குமாறு ஒரு ஒழுங்கு இருக்கு. அதிகம் அடுத்து வரும் எழுத்துக்கள் பக்கத்தில பக்கத்துல இருக்கு.
எடுத்துக்காட்டுக்கு,
ந – த; ங – க; ண – ட; ன – ற; ஞ – ச
ஆகிய எழுத்துக்கள் அருகருகில இருக்கும்.
4. தமிழ் எழுத்துக்களை எப்படி புரிஞ்சிக்கிறமோ அந்த வகையில தான் இதுவும் அமைஞ்சிருக்கு. அதாவது, உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் என்பது தான் இவ்விசைப்பலகையின் அடிப்படை.
5. மிக வேகமா தட்டச்சு செய்யலாம். அயர்ச்சி, சோர்வு வராது. கடந்த ஒரு வருஷமா தான் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துறேன். ஆனா, 7 வருஷம் பழக்கமான ஆங்கிலத்தோட வேகமா தட்டச்ச வருது. எப்படி இவ்வளவு வேகமா தட்டச்சு செய்யுறேன்னு நண்பர்கள் வியக்குறாங்க. பழகினதுக்கு அப்புறம் விசைப்பலகைய பார்க்காமயே தட்டச்சு செய்ய எளிது. ஆங்கில விசைப்பலகைக்கு கூட எனக்கு இன்னும் இந்த நம்பிக்கை வரவில்லை. தட்டச்சுப் பயிற்சி நிலலயத்துக்கு செல்லாம நீங்களே இத கத்துக்க எளிது.
6. இது பல தமிழறிஞர்கள் ஒன்று கூடி ஆலோசிச்சு கூடி உருவாக்கி, சோதிச்சுப் பார்த்து தமிழக அரசால் கணித்தமிழுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரே விசைப்பலகை. பிற விசைப்பலகைகள் எல்லாம் இந்த மாதிரி இல்லாம தனி முயற்சியில் உருவானவை. எனவே அதில் உள்ள நுட்பத் திறமும் குறைவாக இருக்கும்.
7. 247 தமிழ் எழுத்துக்களை 31 விசைகளில் அடக்குகிறது இந்த விசைப்பலகை வடிவமைப்பு. இதன் எளிமை பிற மொழி விசைப்பலகைகளில் காணக்கிடைக்காதது. இதன் வடிவமைப்பே புத்திசாலித்தனமானது. நாம் உள்ளிடாமலயே மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப செயல்பட்டு நம் வேலையை குறைக்கிறது. இது தொடர்பாக உள்ள 12 புத்திசாலித்தனமான விதிகளை பாருங்கள். இதை பழகப் பழகத் தான் தமிழ் எவ்வளவு கட்டமைப்பும் ஒழுங்கும் உடைய எளிமையான மொழி என்று வியக்க வேண்டி இருக்கிறது. தமிழ் spelling கஷ்டம்னு சொல்றது எல்லாம் நாம் ஒழுங்கா எழுத்துக்கள பலுக்கத் தெரியாததால் வந்த வினை. ஆனா, இலங்கையில ல, ள ண, ன , ந , ர , ற வேறுபாடுகள் எல்லாம் அம்மா, அப்பாக்களே தெளிவா சொல்லித் தர்றதா மயூரன் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு எங்க தமிழம்மாவும் சொல்லித் தரல..பெத்த அம்மாவும் சொல்லித் தரல :(
8. எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம், இதப் பயன்படுத்தாட்டியும் பரவால. romanised / அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை மட்டும் பயன்படுத்த வேண்டாம். முதலில் கொஞ்ச நாள் தமிங்கிலத்தில் எழுதிப் பழகி விட்டு அப்பாவுக்கு காகிதத்தில் கடிதம் எழுதும்போது என்னை அறியாமல் appa eppadi irukkeenga? ungkaL katitham kaNdeen என்று எழுதும் அளவுக்கு உள்மனத்தில் இந்த எழுத்து முறை பதிந்து விடுகிறது. தமிங்கில sms அனுப்புவதாலும் இதே பாதிப்பு வருகிறது. அடுத்த தலைமுறை தமிழுக்கான சொற்களை ஆங்கில எழுத்துக்களின் பிம்பங்களாக உள்வாங்கிக் கொண்டால் அதை விட அவமானம் உண்டோ? அதனால் இன்றே தமிங்கில தட்டச்சை விடவும். இதற்கு பிற தட்டச்சு முறைகளான பாமினி, typewriting layout எவ்வளவோ பரவாயில்லை. அவற்றை பழகியவர்களுக்கு அதை விட்டு தமிழ்99க்கு வர கடினமாக இருக்கும். ஆனால், தமிங்கிலக் காரர்கள் எளிமையாய் மாறிக் கொள்ளலாம். தமிங்கிலத் தட்டச்சை விட்டொழிப்பதற்கான இன்னும் வலுவான காரணங்களை அறிய ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும் என்ற கட்டுரையைப் பாருங்கள்.
கணினியில் தமிழ்த் தட்டச்சுக்கு அறிமுகமாகும்போது ஏறக்குறைய எல்லாரும் தமிங்கிலப் பலகை மூலம் தான் அறிமுகமாகிறோம். ஆனால், விரைவில் அடுத்த கட்டமாக தமிழ்99 கற்றுக் கொள்வது நலம். சொந்தக் கணினி வைத்திருப்பவர்கள் தமிழ்99க்கான எ-கலப்பை நிறுவலாம். பயர்பாக்ஸ் வைத்திருப்பவர்கள் எ-கலப்பைக்கு ஒத்த தமிழ் விசை நீட்சியைப் பயன்படுத்தலாம். சுரதா எழுதியில் கூட tam தெரிவு தமிழ்99க்கு ஒத்த வசதியை தருகிறது. ஆனால், இதில் சில குறைகள் இருக்கிறது. அதனால், அவசரத்துக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
ஒருமுறை தமிழ்99 பயன்படுத்திப் பழகிவிட்டால் பிறகு கனவிலும் பிற முறைகளில் தட்டச்ச மனம் வராது.
இறுதியாக, மேல்விவரங்களுக்கு:
1999ஆம் ஆண்டு நடந்த தமிழ் இணைய மாநாட்டின் பகுதியாக அமரர் நா. கோவிந்தசாமி அவர்களின் முன்முயற்சியில் இவ்விசைப்பலகை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மேலும் அறிய, பிற வலைப்பதிவர்கள் தமிழ்99 விசைப்பலகை அருமை பெருமைகள் பற்றி கூறுவதை படிக்க பின் வரும் தளங்களை பாருங்கள்:
1. தமிழ் விக்கிபீடியா கட்டுரை
2. கணினியில் தமிழ் தட்டச்சு எப்படி?
3. அனுராக்
4. Voice on Wings கருவி.
5. Voice on Wings.
6. Shortcuts / Syntax that Tamil99 users should know.
7. தமிழ்99 பயனர் வாக்குமூலங்கள் :) .
8. தமிழ்99 பயிற்சி நிகழ்படம்
9. தமிழ்99 தட்டச்சுப் பயிற்சி ஏடு 1, 2. (pdf)
10. கணிச்சுவடி – எ-கலப்பை நிறுவல், பயன்பாடு, தமிழ்99 பழகுமுறை குறித்து படங்களுடன் கூடிய விரிவான விளக்கம் உள்ள .pdf கோப்பு. ஆக்கம் – சிந்தாநதி.
11. கணினித்திரையில் பார்த்தவாறே தட்டச்சு செய்வதற்கான தமிழ்99 விசைப்பலகை Yahoo widget.
12. தமிழ்99 விழிப்புணர்வு இணையத்தளம்
தமிழ்99 முறையில் தட்டச்சு செய்வதற்கு NHM writer பயன்படுத்தலாம்.

 மேல்விவரங்களுக்கு: http://blog.ravidreams.net