ismayil singam.blogspot.com

Saturday, 7 January 2012

மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி ?


   சிலசமயங்களில்  அவசரமாக  பாண்டை கழட்டும்போது  ஜிப்பில்  அது மாட்டிகொள்வது என்பது ஒரு அவசர  நிலை ஆகும் , இப்படியும் நடக்குமா என்பவர்கள் தங்கள் குஞ்சை சாரி நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் ஒருதடவையேனும் ஜிப்பில் மாட்டிகொள்ளவில்லை? சிறிய காயமாவது நடந்திருக்கும். அட்லீஸ்ட் குழந்தைகளுக்கு இது போன்ற நிலை ஏற்படுகிறது  அந்த சமயத்தில் பதட்டபடாமல்  வீட்டிலேயே அதை  விடுவிக்கும் முக்கிய டிப்ஸ்கள் இதோ!

ஆணுறுப்பின்  முன் தோலே  பெரும்பாலும்  மாட்டிகொள்ளும்,  அது ஜிப்பின் பல்லுக்கு  இடையே மட்டும்  உள்ளதா? அல்லது ஜிப்பிற்கும் அதன் மேல் உள்ள இழுபானுக்கும்     இடையே உள்ளதா என்று கவனமாக பார்க்க வேண்டும் .
பல்லுக்கு  இடையே மட்டும் இருந்தால் :
  முதலில்  ஜிப்பை  பான்டில் இருந்து  கத்தரித்து எடுக்கவேண்டும் . (பான்ட் போனால் போகட்டும் போடா! அந்த முக்கிய பகுதியை காப்பாற்றினால் போதும்! )  இப்பொது முன் தோளோடு ஜிப் மட்டுமே இருக்கும் பிறகு  1  என்ற இடத்தில கட்  செய்யவேண்டும் . அதன் வழியே  இழுபனை விடுவிக்க வேண்டும் . அதன் பின்  பல் பகுதியை விரித்தால் தோல்  விடுபடும்














பல்லுக்கும்  இழுப்பனுக்கும்  இடையே மாட்டிக்கொண்டால் :

The Chomp and Squeeze Method:

இந்த முறையில்  கட்டிங் பிளேயர் கொண்டு  இரு முனைகளையும் கட் செய்த பிறகு  இழுபானின்  இரு  புறம் அழுத்த வேண்டும் இதன் மூலம்  தளர்வாகி விடுபடும் .
 
 
 
 Screw- driver Method:
     ஒரு பெரிய  ஸ்க்ரு  டிரைவரை  இழுபனின் இரு முனைகளுக்கு இடையே விட்டு  நெம்பவேண்டும்.சாதாரணமாக   முன் தோல் ஒரு புறமே  மாட்டி இருக்கும் , எனவே அதற்கு எதிர் புறம் நெம்புவதால்  எளிதில் விடுபடும் .
 
 இன்னொரு  முறையில்  இழுப்பானின்  நடு பகுதியை  கட்டிங் பிளேயர்  கொண்டு  நறுக்குவதன் மூலம் செய்யலாம் , இது மிக கவனமுடன் செய்ய வேண்டும் . ( ஏன் என்று உங்களுக்கே தெரியும்)

 
உங்களால் எந்த ஒரு முறையிலும் முடியவில்லை எனில் உடன் ஒரு ஆண் மருத்துவரை  அணுகவும் .  குழந்தையாக இருந்தால் யாரிடம் வேண்டுமானாலும் காண்பிக்கலாம்.பாண்டில் இருந்து ஜிப்பை மட்டும்  வெட்டில் பிரித்து  டாக்டரிடன் சென்றால்  அதிக சேதாரத்தை தவிர்க்கலாம்.
இதை விட அவசரப்படாமல் ஜிப்பை திறந்தால் எல்லாமே இன்பமே!

1 comment:

  1. ஜட்டி போட்டுக்கொண்டு பேண்டை கழற்றினால் குஞ்சு மாட்டிக்கொள்ளாது.

    ReplyDelete