ismayil singam.blogspot.com

Friday, January 13, 2012

ஆண்குறி அளவு + கருத்தடை முறை

ஆண்குறி அளவு -

பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் இருக்கும் கவனம் போல சில ஆண்களுக்கு தங்கள் ஆண்குறி அளவின் மீது கவனம் இருப்பதுண்டு. இதனை பயன்படுத்தி பல மோசக்கார பண ஆசை பிடித்தவர்கள், மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் தொழில் நுட்பங்கள் என பயனில்லாத மருத்தவம் செய்து பண்த்தினை கொள்ளை அடிக்கின்றார்கள்.
குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்று நினைக்கும் சில ஆண்கள், உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். விறைத்த ஆண் குறிகளில் 90% 12-17 செ.மீ (5-7இன்ச்) நீளமும், 2.5-5 செ.மீ (1-2 இன்ச்) தடிமனும் உடையதாய் இருக்க வேண்டும். இது ஒரு சராசரி அளவு.
அளவிற்காக அறுவை சிகிச்சை -

குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மருத்தவர் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால் இந்த அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது. நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப் போதல், செயலிழத்தல் அல்லது அளவில் மாற்றம் ஏற்படாமல் மனதில் ஏற்படும் ஏமாற்றம் இவற்றில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே இந்த அறுவை சிகிச்சையின் சிக்கல்.
ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை –

பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை விட ஆண்கள் செய்துகொள்ளும் புதிய குடும்பநல கருத்தடை சிறப்பு வாய்ந்தது. பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை முறையானது பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள் உறுப்புகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியுள்ளது. கத்தி, கத்திரிக்கோல் ஆகியவைகளை உபயோகித்து அறுவை சிகிச்சை செய்வதால் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும்.
வலி ஏற்படும், தழும்பு தெரியும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்கும். அன்றாட பணிகளை முன்போல செய்யமுடியாத சிரமம் ஏற்படும். அவர்களின் உடல் பலவீனமடையும். இரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel Vasectomy கருத்தடை எளிமையானது.
No Scalpel Vasectomy (NSV)
ஆண்களுக்கான புதிய கருத்தடை முறையில் மயக்க மருந்து கொடுப்பதில்லை. உடலின் உள் உறுப்புகளில் எதையும் அறுவை செய்யாமல், வெளிப்பக்கத்தில் மட்டும் ஓரிரு நிமிடங்களில் செய்துவிடலாம். இது அறுவையில்லாத ஆண் கருத்தடை முறை என்று அழைக்கப்படுகிறது. ஆணுறுப்பை மரத்துப் போகச் செய்ய ஊசி போடுவதால், இதைச் செய்யும்போது வலி ஏற்படாது.
விரைப்பையில் சிறுதுளையிட்டு, உயிரணுக்கள் செல்லும் குழாயை கட் செய்து, இருபக்கமும் மூடி(seal) விடுவார்கள். அறுவையே இல்லாததால் தையல் போட வேண்டிய அவசியமே இல்லை. அதனால் தழும்பும் இருக்காது.
மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பிவிடலாம். இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் சாதாரண வேலைகள் செய்யலாம். எந்த உணவுக்கட்டுப்பாடும் தேவையில்லை. பின்விளைவுகள் ஏதும் இருக்காது.
இல்லற வாழ்வு -
சிகிச்சைக்குப் பின் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாது. உடலுறவின் உச்சகட்டத்தின் போது வெளியேறும் திரவத்தில், உயிரணுக்கள் ஒரு பங்கும் மற்ற திரவங்கள் ஒன்பது பங்கும் இருக்கும். இதில் உயிரணுக்கள் வருவதை மட்டும் இந்த சிகிச்சை முறை மூலம் தடை செய்வதால், மற்ற 9 பங்கு திரவம் வழக்கம் போல் வெளியேறும். இல்லற வாழ்க்கை முன்போலவே இருக்கும்.
கருத்தடைப் பற்றிய அதிக தகவலுக்கு -

திட்ட அலுவலர் குடும்ப நலப்பிரிவு எண் – 35,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை – 10.
தொலைபேசி: 28364951 Extn: 319. கைப்பேசி: 98413 08266
நன்றி -
கீற்று இதழ்

1 comment:

  1. நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete