அழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறக்கும்
போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான எளி ய முறைகளை காணலாம்.
கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்
*ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும் பு சத்து குறைவான உணவு பழக்க வழக் கம்.
* மன உளைச்சல், கோபம், படபடப்பு.
* கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.
* கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.
முடி உதிர்வது நிற்க வேண்டுமா?
பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச் னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண் டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொரு ட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.
முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறை கள்:
*வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.
*தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வள ரும். தலையும் குளிர்ச்சியாக இருக் கும்.
நரைமுடி கருப்பாக வேண்டுமா?
* மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலு மிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனை த்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்
காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீ ரில் கழுவ வேண்டும். குறிப்பாக ம ருதாணியை போடு வதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல் லாதவாறு பார்த்து கொள்ள வேண் டும்.
* கறிவேப்பிலையை ஒருநாள் வி ட்டு ஒருநாள் துவையல் அரை த்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப் படி யாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.
பொடுகு தொல்லையா?
* தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூ ரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெ யை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடு கு மறைந் து விடும்.
பேன் தொல்லை நீங்க வேண்டுமா?முடியில் அழுக்குகள் சேர்வதாலும், வியர் வை பெருக்கத்தாலும், பேன் உள்ளவர்கள் பயன்படுத்தும் சீப்பை உபயோகிப்பதன் மூலமும் பேன் தோன்றுகிறது. இதனு டைய முக்கியமான உணவுத் தலை யில் உள்ள ரத்தம் தான்.
*கருந்துளசி இலைகளை தலையணையின் மே லே நன்றாக பரப்பி வைக்கவும். அதன்மேல் மெல்லிய துணியைப் போர்த்தி அத்துணி யின் மேல் படுத்து உறங்கவும். இவ்வாறு செய்து வந் தால், எல்லா பேன்களும் இறங்கி ஓடி மறைந்து விடும். சத்தான உணவு இல்லா மல், எப்படிப் பட்ட விலை உயர்ந்த ஷாம்பு மற்றும் ஆயில்களை பயன்படுத் தினாலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியாது. எனவே, உண வு பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

Thanks for sharing this great article. Its very interesting. I would like to share this Hair Dye Tips for You friends ஹேர் டை இல்லாமல் உங்கள் முடியை சட்டென்று கருப்பாக 3 சூப்பர் டிப்ஸ்!
ReplyDelete