ismayil singam.blogspot.com

Thursday, 26 January 2012

செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவோருக்கு செக்ஸ் சம்பந்தமான தொற்று நோய்கள் வருமா?

செக்ஸ் என்றாலே, “அது ஒரு மர்மம்” என்பதுபோலத்தான் பாவிக்கப்படுகிறது உலகத்தின் வளர்ந்த, இடைப்பட்ட மற்றும் பின்தங்கிய என எல்லா நாடுகளிலும். விளைவு, செக்ஸ் பற்றிய விவரங்களை அறிய ஒரு அதீத ஆர்வம், ஒரு இனம்புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பல வகையான உணர்வுகள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன! சரி, செக்ஸ் பத்தின ஒரு செய்திக்கே இவ்வளவு பில்டப்புன்னா, உலகத்துல இருக்கிற எல்லா மக்களோட செக்ஸ் பத்தின ஒரு புள்ளி விவரம்னா கண்டிப்பா ஒரு “கிக்” இருக்கத்தானே செய்யும்?!
புள்ளி விவரம்ன உடனே இந்தியாவுல மொத்தம் 40 கோடியே 68 லட்சம் விடலை பசங்க/பொண்ணுங்க இருக்காங்க, அவங்கள்ல 20 கோடி பேர் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு முறையாவது செக்ஸ் வச்சிக்கிறாங்க….அப்படின்னு நம்ம “புள்ளி விவரம் கேப்டன்” விஜயகாந்த் மாதிரி பட்டியல் (ப்ளேடு!) போடப் போறேன்னு  நெனச்சிடாதீங்க மக்களே! இது ரொம்ப சின்ன பட்டியல்தான். ஆனா, கொஞ்சம் சுவாரசியமான, அதே சமயத்துல ஆச்சரியமான புள்ளி விவரங்கள பத்திதான் நாம இப்போ பார்க்க போறோம்!

ஆமாம், நாம ஏன் உடலுறவு வச்சிக்கிறோம்?

எத்தன பேரு இப்படி கெளம்பி இருக்கீங்க?! அப்படின்னு கேட்காதீங்க! உண்மையாலுமே நாம் எதுக்கு செக்ஸ் வச்சிக்கிறோம்னு பார்த்தா, பாலுணர்வு தூண்டப்படுவதால் (அதாங்க….”மூடு” வர்ரதுனால!) அப்படின்னு ஒரு நேரடியான காரணமிருந்தாலும்,  நம் சந்ததியை உருவாக்க அப்படின்னு ஒரு  அறிவியல்பூர்வமான காரணம் ஒன்னு இருக்குங்கோவ்! சரி நாம் இப்போ ஒரு முக்கியமான புள்ளி விவரத்துக்கு வருவோம்.
உலகத்துலேயே மிக அதிகமான குழந்தைங்கள பெற்ற பெண்மணி யாரு தெரியுமா உஙகளுக்கு? அவங்க 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ரஷ்யப் பெண். உலகத்துலேயே அதிகமான குழந்தைங்கள பெற்ற பெண் அப்படிங்கிற உலக சாதனை படைச்சவங்க! அவங்களுக்கு மொத்தம் எத்தனை குழந்தைங்க தெரியுமா? 69 குழந்தைங்க! இந்த குழந்தைங்கள மொத்தம் 27  பிரசவத்துல, 16 இரட்டைக்குழந்தைகள், 7 மூன்று குழந்தைகள் மற்றும் 4 முறை நான்கு குழந்தைகள் வீதம் பெற்றெடுத்துருக்காங்க. அடேங்கப்பா!
இருங்க இருங்க, அதுக்குள்ள இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி? ஆம்பிளைங்க மட்டும் சளைச்சவங்களா என்ன? அப்படின்னு  நம்மாளு ஒருத்தரு உலகத்துலயே அதிகமான குழந்தங்களுக்கு அப்பா அப்படிங்கிற கின்னஸ் சாதனையை படைச்சு கலக்கிட்டார்ல?! அவரு 17- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மொராக்கோ நாட்டு மன்னர். நம்மாளு மொத்தம் 342 மகள்கள், 525 மகன்கள், ஆக  867 குழந்தைங்களுக்கு அப்பா. அடேங்கப்பா! நாங்க சிங்கம்ல!?  சரி அடுத்த மேட்டருக்கு வருவோம்…

ஆமா “அதோட” அளவுக்கும், திருப்தியான  செக்ஸுக்கும் உண்மையிலேயே ஏதாவது சம்பந்தம் இருக்குதா?

சேச்சே….அதெல்லாம் சும்மா டுபாக்கூரு! ஊரை ஏமாத்தறதுக்காக எவனோ போட்ட பிட்டு! சினிமாவுல காட்டறதெல்லாம் சும்மா. அறிவியல் ஆய்வுப்படி, உணர்ச்சிவசப்பட்ட  “அதோட” சராசரி அளவு 5-7 இன்ச்சுதானாமுங்க! அவ்வ்வ்…!

நாம உடலுறவு வச்சுக்க, உதவி எதாவது தேவையா?

40 வயதான சுமார் 5 விழுக்காடு ஆண்களும், 15-25 விழுக்காடு 65 வயதான ஆண்களும் “எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன்” அப்படிங்கிற ஒரு பிரச்சினையை அனுபவிக்கிறாங்களாம்! அப்படின்னா கண்டிப்பா “….க்ரா” தேவையோ?!

சராசரியா மக்கள் தங்கள் கற்பை எந்த வயசில இழக்கிறாங்க?

அமெரிக்க ஆண்கள் 16.9 வயசிலயும், பெண்கள் 17.4 வயசிலயும் தங்கள் கற்ப்பை இழக்கிறாங்களாம். இதுக்கு மரபனுவியல் சம்பந்தமான காரணங்கள் கூட அடிப்படையா இருக்க்லாமுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க!

கல்யாண ஆன எத்தன பேரு நிம்மதியா தூங்கறாங்க?

அமெரிக்காவுல, கல்யாணமான ஆண்/பெண்கள்ல பத்துல ஒருத்தர் (12 விழுக்காடு) தாங்கள் இரவில் தனியாக தூங்கறதா சொல்லியிருக்காங்க! என்ன கொடுமை சரவணன் இது?!

ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் உச்சகட்டதை (ஆர்கஸம்) அடைவீங்களா?

இந்த கேள்விக்கு, 75 விழுக்காடு ஆண்கள் ஆம் என்றும், வெறும் 29 விழுக்காடு பெண்கள் ஆம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்!

“அந்த” மாதிரி சுகம் மட்டும் கொடுக்கிற நண்பர்கள் இருக்காங்களா?

மூன்றில் இரண்டு பங்குஅமெரிக்க கல்லூரி மாணவர்கள் ” அந்த மாதிரி” நண்பர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், அந்த மாதிரி நட்புக்கு கமிட்மென்ட் இல்லாத ஒருவர் அவசியம் அப்படின்னும்  சொல்லியிருக்காங்க!  அதுமட்டுமில்லாம, நண்பர்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட 50 விழுக்காட்டினர் எல்லா விதமான காம விளையாட்டுகளிலும் ஈடுபட்டதாகவும், 22.7 விழுக்காட்டினர் புணர்ச்சி மட்டும் வைத்துக்கொண்டதாகவும்,  8 விழுக்காட்டினர் புணராமல், இன்ன பிற கேளிக்கைகளில் மட்டும் ஈடுபட்டதாகவும் சொல்லியிருக்காங்க!

இதுவரைக்கும் எத்தனை செக்ஸ் பார்ட்னர் இருக்காங்க உங்களுக்கு?

இந்தக் கேள்விக்கு, 20-50 வயதுக்குட்பட்ட பெண்கள் 4 செக்ஸ் பார்ட்னர் என்றும், ஆண்கள் 7 என்றும் சொல்லிருக்காங்க! இதத்தான் கலிகாலம்னு சொல்றாங்க போலிருக்கு?!
இப்போ நாம ஒரு அதிமுக்கியமான மேட்டருக்கு வருவோம், அதாங்க “புள்ளி ராஜா மேட்டரு”!

செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவோருக்கு செக்ஸ்  சம்பந்தமான தொற்று நோய்கள் வருமா?

தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுவோரில், குறைந்தது 50 விழுக்காட்டினருக்கு “HPV Infection” (Human Pappilloma Virus) அப்படிங்கிற ஒருவித வைரஸ் கிருமியால வர்ர நோய் வாழ்க்கையில ஒரு முறையாவது வருமாம்!  இந்நோயை இரு வகையாக பிரிக்கலாம்.  இரண்டு வருடங்களில் குணமாகக்கூடிய  ஆபத்தில்லாத நோயாகவும், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நோயாகவும் வரும் வாய்ப்பு இருக்கிறதாம்!  கவலைப்படாதீங்க, 90 விழுக்காடு வரை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின்மூலம் இந்நோயை விரட்டி அடித்துவிடலாமாம்! வயித்துல பால வாத்துட்டாங்கப்பா?!

Wednesday, 25 January 2012

பேரீச்சம் பழத்தின் அற்புதமான பயன்கள்! – தினமும் சாப்பிட வேண்டிய ஒன்று

பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.
சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு: ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும்

கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!


2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருத்துவ பயன்கள் நிறைந்த பலா மரம்!!

மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே எனலாம். அதோடு, மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் ஆரோக்கியத்தோடு வாழவைக்கும் தன்வந்திரியாகவும் திகழ்கிறது.

இந்த வகைகளில் அதிக மருத்துவப் பயன் கொண்ட பலா மரம் பற்றி விரிவாக அறிவோம். பலாப்பழத்தை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. அதன் சுவையை நினைத்தாலே நாவில் நீர் சுரக்கும்.
பலா இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் மரமாகும். இதில் ஆசினிப்பலா, கூழைப்பலா, வருக்கைப் பலா என பல வகைகள் உண்டு.
பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இதனை சக்கை, பலவு, பலாசம், வருக்கை, ஏகாரவல்லி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
பலா இலை
பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி அதனை தேனில் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும். வாயுத் தொல்லைகள் நீங்கும். பலா இலைகளை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் ஆறும். பல்வலி நீங்கும். பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும்.
பலா பிஞ்சு
பலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும், நீர்ச்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணமாகும். உடலுக்கு வலு கொடுக்கும். வாத, பித்த, கபத்தை சீராக வைத்திருக்கும். நரம்புத் தளர்வைப் போக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
பலாப்பழம்
முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது. மிகுந்த இனிப்புச் சுவையுடையது. இரத்தத்தை விருத்தி செய்யும். உடலுக்கு ஊக்கமளிக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும். பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு சீரணமாகும்.
பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் . இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் .
பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும் . பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும் . சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும் , சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும் .
மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும் . பழுத்த , நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது . எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும் . அதுதான் உடம்புக்கு நல்லது .
பலாக் கொட்டை
பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக்கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும். பலாக் கொட்டைகளை சுட்டும், அவித்தும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். வாயுத் தொல்லைகளை நீக்கும். பலாமரத்தின் பயன்களை முழுமையாகப் பெற்று நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.

குறட்டை (Snore) – இருக்கா!! என்ன செய்வது???

குறட்டையை தடுக்க வழிகள்
நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.
இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-
காரணங்கள்:
நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.
முழு தூக்கம் இருக்காது:
யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.
உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.
சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3 வகை நோயாளிகள்:
குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.
1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.
2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.
3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.
மாரடைப்பு அபாயம்:
7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.
ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.
கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.
ஆபத்தான நோய்:
டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.
கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.
ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.
குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.
இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:
இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.
உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
குறட்டையை குறைக்க:
ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.
குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.
ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.
யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.
சிகிச்சை முறை:
குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.
அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.
முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.
இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.
அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.
ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

தண்ணீர் துளிக்குள் உலகங்கள், அற்புத புகைப்படங்கள்!

ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகள்!! – ஆராய்ச்சி தகவல்

எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.
காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.
ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம்
மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.
மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.
அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.
மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.
மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.
ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.
எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.
‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.

ஒரு வாழைப்பழம் 4 ஆப்பிளுக்கு சமம் (இளமை, ஆரோக்கியம் நிச்சயம்) – அராய்ச்சி தகவல்

அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான்.
எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:
வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல.
ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.
ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது.
முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.
ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம்.
வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

Monday, 23 January 2012

தெரிந்தோ தெரியாமல் சிறுவயதில் செய்த தவறுகளினால்

தெரிந்தோ தெரியாமல் சிறுவயதில் செய்த தவறுகளினால் உங்களால் எதுவுமே முடியலியா? உடல் சிறுத்துப் போய் சோர்வாக தோற்றமளிக்கிறீர்களா? உற்சாகமே இல்லாமல் இருக்கிறதா? சாப்பாடு உடலில் ஒட்டவில்லையா? கை நடுங்குகிறதா? பயமாக இருக்கிறதா? வேதனைகளும் சோதனைகளும் கைகோர்த்து வருகிறதா?

கவலையே வேண்டாம், ஆறு தலைமுறைகளாக சேலத்திலேயே இருந்து ஆராய்ச்சி செய்து கண்டறிந்த வைத்தியமுறையால் உங்கள் அனைத்து பிரச்சனைகளும் ஐந்தே நிமிடத்தில் குணமடையும். 

எங்கள் வைத்தியமுறையின் படி உங்களுக்கென சிறப்பாக தயாரித்துக் கொடுக்கப்படும் கயிறை வாங்கி கழுத்தில் கட்டிக் கொண்டு தொங்கினீர்கள் என்றால் ஐந்தே நிமிடத்தில் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்வது உறுதி. 

சாதா ட்ரீட்மெண்ட்: ரூ 5999



ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 9,999

சூப்பர் ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 15,999


அடுத்த விளம்பரத்தில் எங்களிடம் கயிறு வாங்கி தொங்கியவர்களின் பேட்டி எடுத்துப் போடப்படும், தவற விடாதீடாமல் பார்த்து மகிழுங்கள்!

Saturday, 21 January 2012

சென்னை மாநகரின் அந்தக் கால காட்சிகள்

1639ஆமஆண்டஆகஸ்டமாதம் 22ஆமதேதிதானஇன்றசென்னஎன்றஅழைக்கப்படுமஇம்மாநகருக்கவித்திடப்பட்டது. அன்றுதானமதராஸபட்டணமஎன்றழைக்கப்பட்சென்னகடற்கரையஒட்டிய 5 சதுமைலநிலப்பரப்பவிஜநகபேரரசிடமிருந்தபெற்வெள்ளையரினகிழக்கிந்திகம்பெனி ஒரகோட்டையைககட்டி இந்நகருக்கவித்திட்டது.



அந்நாளஇன்றுவரசென்னமாநகரினபிறந்தினமாகடைபிடிக்கப்பட்டவருகிறது. மதராஸபட்டணத்தின், அதாவதசென்னமாநகரத்தின் 369வதநிறுவதினத்தமுன்னிட்டசென்னராஜாஜி அரங்கிலஒரசிறப்பகண்காட்சி ஏற்பாடசெய்யப்பட்டுள்ளது.




இக்கண்காட்சியிலசென்னநகரமஎப்படி இருந்ததஎன்பதஅரிபுகைப்படககாட்சிகளைததொகுத்தநமகண்களுக்கவிருந்தாக்கியுள்ளனர்.

சென்னசென்ட்ரலஇரயிலநிலையத்திற்கஅருகஓடுமபக்கிங்ஹாமகால்வாயிலபடகுகளசெல்லுமகாட்சி ஏதஒரஅற்புஓவியத்தபார்ப்பதுபோலஉள்ளது.

1960ஆமஆண்டுவரபக்கிங்ஹாமகால்வாயிலபடகபோக்குவரத்தநடந்துவந்ததாகககூறுகிறாரி. ஹேம்சந்திராவ்.

ஒரநூற்றாண்டிற்கமுன்னர்வரகூவமநதி குளித்தநீராடுமநதியாஇருந்ததஎன்றகூறிராவ், அந்ந்தியிலஅரநூற்றாண்டிற்கமுன்பவரமீனபிடிக்கப்பட்டுவந்ததாகவுமகூறி நம்மஅதிரசசெய்தார்.



நம்மவாழவைக்குமஇந்நகரநாமவாவைக்கவேண்டும், அதற்கஇந்நகரசுத்தமாக்கி நாமகாப்பாற்வேண்டுமஎன்பதஇக்கண்காட்சி நடத்துமநோக்கமஎன்றராவகூறியபோது, அதஎவ்வளவசாத்தியமற்றதஎன்றநினைக்துபபார்க்க... நெஞ்சமகணத்தது.


Bank%20Of%20Madras-1935.gif
Bank Of Madras-1935
Chennai%20Ambulances-1940.jpg
Chennai Ambulances-1940
Chennai%20Car%20Show%20Room-1913.gif
Chennai Car Show Room-1913
Chennai%20Central%20Railway%20Station-1920.jpg
Chennai Central Railway Station-1920
Chennai%20Central%20Railway%20Station-1925.jpg
Chennai Central Railway Station-1925
Chennai%20Central%20Train%20Station.jpg
Chennai Central Train Station
Chennai%20CENTRAL-RAILWAY%20Station.jpg
Chennai CENTRAL-RAILWAY Statio
Chennai%20Chepauk%20Cricket-1891.jpg
Chennai Chepauk Cricket-1891
Chennai%20City%20Map-1909.jpg
Chennai City Map-1909
Chennai%20Egmore%20Railway%20Station.jpg
Chennai Egmore Railway Station
Chennai%20Egmore%20Station-1920.jpg
Chennai Egmore Station-1920
Chennai%20Egmore%20Waiting%20room-1920.jpg
Chennai Egmore Waiting room-1920
Chennai%20Esplanade-1920.jpg
Chennai Esplanade-1920
Chennai%20ESPLANADE.jpg
Chennai ESPLANADE
Chennai%20First%20Line%20Beach-1915.jpg
Chennai First Line Beach-1915
Chennai%20Ford%20Show%20Room-1917.gif
Chennai Ford Show Room-1917
Chennai%20Fort%20ST%20George%201700s.jpg
Chennai Fort ST George 1700s
Chennai%20HARBOUR-1891.jpg
Chennai HARBOUR-1891
Chennai%20Library-1913.gif
Chennai Library-1913
Chennai%20Marina%20beach%20.jpg
Chennai Marina beach
Chennai%20Marina%20beach-1890.jpg
Chennai Marina beach-1890
Chennai%20Market%20(Kothaval%20Chawadi)-%201939.jpg
Chennai Market (Kothaval Chawadi)- 1939
Chennai%20Moubray%20Road-1885.jpg
Chennai Moubray Road-1885
Chennai%20MUNROE%20STATUE.jpg
Chennai MUNROE STATUE
Chennai%20Mylapore-1906.jpg
Chennai Mylapore-1906
Chennai%20Mylapore-1939.jpg
Chennai Mylapore-1939
Chennai%20Napier%20Bridge-1895.jpg
Chennai Napier Bridge-1895
Chennai%20Old%20Esplanade.jpg
Chennai Old Esplanade
Chennai%20Old%20High%20Court.jpg
Chennai Old High Court
Chennai%20Old%20Mosque.jpg
Chennai Old Mosque
Chennai%20Old%20Mount%20Road%20Anna%20salai-1905.jpg
Chennai Old Mount Road Anna salai-1905
Chennai%20Old%20Mount%20Road%20Anna%20salai.jpg
Chennai Old Mount Road Anna salai
Chennai%20PARADE-GROUND.jpg
Chennai PARADE-GROUND
Chennai%20Parrys%20Corner-1890.jpg
Chennai Parrys Corner-1890
Chennai%20PRESIDENCY-COLLEGE.jpg
Chennai PRESIDENCY-COLLEGE
Chennai%20Pycrofts%20Road-1890.jpg
Chennai Pycrofts Road-1890
Chennai%20RIPPON-BUILDING.jpg
Chennai RIPPON-BUILDING
Chennai%20SPENCERS.jpg
Chennai SPENCERS
FIRST%20EVER%20CHENNAI%20MASTER%20PLAN.jpg
FIRST EVER CHENNAI MASTER PLAN
Madras%20high%20courts_1895.png
Madras high courts_1895
Madras%20view%20from%20the%20harbor%201895.png
Madras view from the harbor 1895
Old%20Chennai%20SENATE-HOUSE.jpg
Old Chennai SENATE-HOUSE
Situationsplan_von_Madras_1888.jpg
Situationsplan_von_Madras_1888
SR%20Headquarters-1922.jpg
SR Headquarters-1922
St.%20Mary's%20Church%2c%20Madras%20.jpg
St. Mary's Church Madras